தங்கம் விற்பனை 20 சதவீதம் குறைவு

சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி), செயலாக்க முதலீடு குறைவு, தங்கத்தின் விலை உயர்வு போன்ற காரணங்களால் தங்க விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளது என்று அ
தங்கம் விற்பனை 20 சதவீதம் குறைவு

சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி), செயலாக்க முதலீடு குறைவு, தங்கத்தின் விலை உயர்வு போன்ற காரணங்களால் தங்க விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளது என்று அகில இந்திய ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி உள்நாட்டு கவுன்சில் தலைவர் அனந்த பத்மநாபன் தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
 தங்கம் விற்பனை கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. நீரவ் மோடி போன்ற சிலர் செய்த தவறால், ஒட்டு மொத்த தங்க நகை தொழில் துறையே பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சரக்கு சேவை வரி ( ஜி.எஸ்.டி.), தங்கத்தின் விலை உயர்வு, செயலாக்க முதலீடு குறைவு ஆகியவையும் தங்க நகை விற்பனை சரிவுக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
 தங்க நகை தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஜூலை முதல், வங்கியில் வாங்கிய கடனில் 20 முதல் 40 சதவீதம் வரை திரும்பச் செலுத்துமாறு அறிவுறுவுத்தப்பட்டனர். இதனால், செயலாக்க முதலீடு கிடைக்காமல், தொழிலை நடத்த முடியாமல் பலர் இருக்கின்றனர்.
 தங்க நகை விற்பனை கடந்த சில ஆண்டுகளாக சரிவில் உள்ளது. கடந்த ஆண்டு தங்கம் விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், தங்கத்தின் மீதான சுங்க வரியை 10 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக வும், ஹால்மார்க் கட்டாயம் என்ற விதியை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு 700 டன் தங்கம் இறக்குமதி செய்கிறோம். தேவை அதிகம் இருக்கும் வேளைகளில் 900 டன் வரை இறக்குமதி செய்யப்படுகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com