பணியாளர் பங்கு ஒதுக்கீட்டின் மூலம் ரூ.270 கோடி திரட்டுகிறது சென்ட்ரல் பேங்க்

பொதுத் துறையைச் சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா பணியார்களுக்கு பங்கு ஒதுக்கீட்டு திட்டத்தின் (இஎஸ்பிஎஸ்) மூலம் ரூ.270


பொதுத் துறையைச் சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா பணியார்களுக்கு பங்கு ஒதுக்கீட்டு திட்டத்தின் (இஎஸ்பிஎஸ்) மூலம் ரூ.270 கோடியை திரட்டவுள்ளது. இந்த பங்கு விற்பனை செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) தொடங்குகிறது. 
இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
இஎஸ்பிஎஸ் திட்டத்தின் மூலம் மூலதனத்தை திரட்டிக் கொள்ள வங்கியின் இயக்குநர் குழு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. 
இத்திட்டத்தின்படி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் பணியாளர்களுக்கு 10 கோடி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இந்த பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.27 என்ற விலையில் விற்கப்பட்டவுள்ளது.
இந்த பங்கு விற்பனை திட்டத்தின் மூலம் வங்கி ரூ.270 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. 
இஎஸ்பிஎஸ் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் இந்த பங்குகள் அனைத்தும்  தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு மட்டுமே  ஒதுக்கீடு செய்யப்படும். 
மார்ச் 19, 2019-இல் தொடங்கும் இந்த பங்கு விற்பனை திட்டம்,  மார்ச் 27 2019 உடன் முடிவடையும் என்று சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, செபியிடம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com