ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் புதிய காப்பீட்டுத் திட்டம்

ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம், சூப்பர் மெடிகிளைம் என்ற புதிய காப்பீட்டு திட்டங்களை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் புதிய காப்பீட்டுத் திட்டம்


ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம், சூப்பர் மெடிகிளைம் என்ற புதிய காப்பீட்டு திட்டங்களை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் (தயாரிப்புகள் & வர்த்தக செயல்பாடுகள்) அஷுதோஷ் ஸ்ரோத்ரியா கூறியதாவது:
உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூஹெச்ஓ) சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொண்டது. இதில்,  இந்திய நகர்ப்புறங்களில் வசிக்கும் 30 முதல் 65 வயதுக்குள்பட்டோரில் 40 சதவீதம் பேர் அதிக எடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோன்று, இதய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், 2025-ஆம் ஆண்டுக்குள் 5.7 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல அடிப்படை காரணிகளை ஆராய்ந்த பிறகே, ரெலிகேர் நிறுவனம் அதற்கேற்ற வகையிலான காப்பீட்டுத் திட்டத்தை சூப்பர் மெடிகிளைம் என்ற பெயரில் தற்போது அறிமுகப்படுதியுள்ளது. இதன் மூலம், புற்றுநோய், இதயநோய் உள்ளிட்ட 32 விதமான நோய்களுக்கும், அறுவை சிகிச்சைகளுக்கும் காப்பீட்டு வசதியை பெறமுடியும் என்றார் அவர்.
கேன்சர் மெடிகிளைம், ஹார்ட் மெடிகிளைம், கிரிட்டிகல் மெடிகிளைம், ஆபரேஷன் மெடிகிளைம் ஆகிய நான்கு பிரிவுகளை சூப்பர் மெடிகிளைம் காப்பீட்டு திட்டம் உள்ளடக்கியுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com