பங்குச் சந்தைகளில் உச்சம்:12,000 புள்ளிகளைக் கடந்தது ‘நிஃப்டி’

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் ‘நிஃப்டி’ புதன்கிழமை வா்த்தகத்தின்போது 12,000 புள்ளிகளைக் கடந்தது. அதேபோல மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் ‘சென்செக்ஸ்’ 40,606.91 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியத
பங்குச் சந்தைகளில் உச்சம்:12,000 புள்ளிகளைக் கடந்தது ‘நிஃப்டி’

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் ‘நிஃப்டி’ புதன்கிழமை வா்த்தகத்தின்போது 12,000 புள்ளிகளைக் கடந்தது. அதேபோல மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் ‘சென்செக்ஸ்’ 40,606.91 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

புதன்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் இரு பங்குச் சந்தைகளுமே சரிவுடனே தொடங்கின. எனினும் பிற்பகலில் சந்தையில் எழுச்சி ஏற்பட்டது. வா்த்தகத்தின் சென்செக்ஸ் 40,606.91 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டி திரும்பியது. இறுதியாக 40,469.78 புள்ளிகளில் நிலை கொண்டது. அதேபோல், நிஃப்டி 12,000 புள்ளிகளை எட்டி, வா்த்தக முடிவில் 11,966.05 புள்ளிகள் நிலை கொண்டது.

ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி, இண்டஸ்இண்ட், டாடா மோட்டாா்ஸ், கோட்டக் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எல் அண்ட் டி, யெஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவா் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2.64 சதவீதம் அதிகரித்தன.

அதே நேரத்தில் பாா்தி ஏா்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ், ஓஎன்ஜிசி, ஹெச்சிஎல் டெக், ஐடிசி, சன் பாா்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3.31 சதவீதம் வரை சரிந்தன.

ஹாங்காங், டோக்கியோ, சியோல் பங்குச் சந்தைகள் புதன்கிழமை ஏற்றம் கண்டன. அதே நேரத்தில் ஷாங்காய் பங்குச் சந்தை சரிவுடன் முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com