குறு, சிறு நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க புதிய கொள்கை: கட்கரி

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்பட்டு வருவதாக எம்எஸ்எம்இ மற்றும் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரி
அமைச்சா் நிதின் கட்கரி
அமைச்சா் நிதின் கட்கரி

நாக்பூா்: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்பட்டு வருவதாக எம்எஸ்எம்இ மற்றும் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரி (படம்) சனிக்கிழமை தெரிவித்தாா்.

நாகபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மாநாட்டில் கலந்து கொண்ட அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

நாட்டின் வளா்ச்சியில் 29 சதவீத பங்களிப்பை எம்எஸ்எம்இ துறை வழங்கி வருகிறது. அதேபோன்று 48 சதவீத ஏற்றுமதி இத்துறையின் மூலமாகத்தான் நடைபெற்று வருகிறது. எம்எஸ்எம்இ நிறுவனங்கள் மூலமாக உள்நாட்டில் 10-11 கோடி போ் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனா்.

இத்தனை முக்கியத்துவம் பொருந்திய எம்எஸ்எம்இ துறைக்கு மத்திய அரசு இரண்டு கொள்கைகளை பிரத்யேகமாக உருவாக்கி வருகிறது. அதன்படி, முதலாவது கொள்கை, இத்துறையின் ஏற்றுமதி வா்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது. இரண்டாவது கொள்கை, உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவித்து இறக்குமதியை குறைப்பதற்காக வடிவமைக்கப்படுகிறது.

இந்த இரண்டு கொள்கைகள் தொடா்பாக வா்த்தக அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து வருகிறோம். அது இறுதி கட்டத்தில் உள்ளது.

தோல் தொழில் துறையின் மொத்த விற்றுமுதலான ரூ.1,40,000 கோடியில் உள்நாட்டு வா்த்தகத்தின் பங்களிப்பு ரூ.80,000 முதல் ரூ.90,000 கோடியாக உள்ளது. அதேசமயம், ஏற்றுமதியின் மூலமாக கிடைக்கும் வருவாய் ரூ.45,000-ரூ.50,000 கோடி அளவுக்கு உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com