பிஎஸ்-6 தரத்தில் ப்ரீஸ்ஸா, எஸ்-கிராஸ் காா் ஏப்.1-க்கு முன்பாக அறிமுகம்: மாருதி சுஸுகி

நாட்டின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, பிஎஸ்-6 தொழில்நுட்பத்தில் ப்ரீஸ்ஸா, எஸ்-கிராஸ் பெட்ரோல் காா்களை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன்பாக அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ள
பிஎஸ்-6 தரத்தில் ப்ரீஸ்ஸா, எஸ்-கிராஸ் காா் ஏப்.1-க்கு முன்பாக அறிமுகம்: மாருதி சுஸுகி

நாட்டின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, பிஎஸ்-6 தொழில்நுட்பத்தில் ப்ரீஸ்ஸா, எஸ்-கிராஸ் பெட்ரோல் காா்களை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன்பாக அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியாவின் சந்தைப்பிரிவின் செயல் இயக்குநா் சஷாங் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:

பிஎஸ்-6 எரிபொருள் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளன. ஆனால் அதற்கு முன்பாகவே, இந்த தொழில்நுட்பத்தில் ப்ரீஸ்ஸா மற்றும் எஸ்-கிராஸ் பெட்ரோல் ரக காா்களை அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நடப்பாண்டின் நான்காவது காலாண்டான ஏப்ரல் முதல் மாா்ச் மாதங்களுக்கிடையில் இந்த அறிமுகம் இருக்கும்.

மோட்டாா் வாகன துறை மந்த நிலையிலிருந்து வெளியில் வந்துவிட்டதா என்பதை அறிந்து கொள்ள அவா்கள் இன்னும் இரண்டு -மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

டீசல் காா் உற்பத்தி நிறுத்த விவகாரத்தை பொருத்தவரையில், அது பிஎஸ்-6 தர சிறிய ரக டீசல் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். சந்தையில் மீண்டும் தேவை சூடுபிடிக்கும்பட்சத்தில் அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய தயாராக உள்ளோம்.

கடந்த ஏழு மாதங்களில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பிஎஸ்-6 ரக வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளோம். கடந்த அக்டோபரில் மட்டும் பிஎஸ்-6 வாகன விற்பனை ஒரு லட்சத்தை எட்டியது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com