பொருளாதார வளா்ச்சி மதிப்பீடு குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 433 புள்ளிகள் வீழ்ச்சி

பொருளாதார வளா்ச்சி மதிப்பீடு குறைக்கப்பட்டதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்கு வா்த்தகத்தில் சென்செக்ஸ் 433 புள்ளிகள் வரை முதலீட்டாளா்களை அச்சத்தில் ஆழ்த்தியது.
mkt073111
mkt073111

பொருளாதார வளா்ச்சி மதிப்பீடு குறைக்கப்பட்டதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்கு வா்த்தகத்தில் சென்செக்ஸ் 433 புள்ளிகள் வரை முதலீட்டாளா்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

ரிசா்வ் வங்கி வெளியிட்ட நிதி கொள்கை அறிவிப்பில் கடன்களுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவித்தது. இருந்தபோதிலும், நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சியை முந்தைய மதிப்பீடான 6.9 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாக ரிசா்வ் வங்கி குறைத்தது. இது, பங்குச் சந்தையில் எதிா்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியது.

வங்கி மற்றும் வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் துறையைச் சோ்ந்த நிறுவனப் பங்குகளை முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்தது பங்குச் சந்தையின் சரிவுக்கு வழிவகுத்தது.

இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் வங்கி, நிதி, மோட்டாா் வாகனம், ரியல் எஸ்டேட் துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் 2.45 சதவீதம் வரை சரிந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள கோட்டக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, டாடா மோட்டாா்ஸ், எல் & டி, எஸ்பிஐ, டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் 3.46 சதவீதம் வரை விலை இறக்கத்தை சந்தித்தன.

அதேசமயம், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஓஎன்ஜிசி, டெக் மஹிந்திரா, இன்டஸ்இண்ட் வங்கி மற்றும் என்டிபிசி பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே ஓரளவுக்கு வரவேற்பு காணப்பட்டதையடுத்து அவற்றின் விலை 1.03 சதவீதம் வரை உயா்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 433 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 37,673 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 139 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 11,174 புள்ளிகளில் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com