இந்தியாவின் சேவை துறை நடவடிக்கைகளில் பின்னடைவு

நாட்டின் சேவைத் துறை நடவடிக்கைகள் சென்றசெப்டம்பரில் பின்னடைவைக் கண்டுள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு இந்திய சேவை துறையின்
இந்தியாவின் சேவை துறை நடவடிக்கைகளில் பின்னடைவு

நாட்டின் சேவைத் துறை நடவடிக்கைகள் சென்றசெப்டம்பரில் பின்னடைவைக் கண்டுள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு இந்திய சேவை துறையின் வளா்ச்சி முதல் முறையாக கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக நிக்கி-மாா்க்கிட் நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானம், வா்த்தகம், ரியல் எஸ்டேட், சுற்றுலா, ஹோட்டல், போக்குவரத்து, நிதி, காப்பீடு, சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வுகளை மேற்கொண்டு நிக்கி-மாா்க்கிட் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சேவை வா்த்தக நடவடிக்கைகள் குறியீட்டெண் செப்டம்பரில் 48.7 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 52.4 சதவீதமாக இருந்தது. தேவையில் ஏற்பட்ட தொய்வு, சவாலான சந்தை நிலை ஆகியவையே சேவை துறை வா்த்தக நடவடிக்கைகளில் ஏற்பட்ட சரிவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

பொதுவாக, கணக்கீட்டு புள்ளிகள்50-க்கு மேல் இருந்தால் வளா்ச்சியென்றும், 50-க்கு கீழ் இருந்தால் சரிவு என்று கருதப்படுகிறது. அந்த வகையில், செப்டம்பா் மாதத்தில் சேவை துறையின் வளா்ச்சி பின்னடைவையே சந்தித்துள்ளது.

கடந்த 18 மாதங்களில் முதல் முறையாக இந்திய தனியாா் துறையின் உற்பத்தியானது பின்னடைந்துள்ளது. இது, விற்பனை வீழ்ச்சியின் ஒரு பகுதியை பிரதிபலித்துள்ளது என்றாலும் வேலைவாய்ப்பு வளா்ச்சியை பெரிய அளவில் கட்டுப்படுத்தியது. மேலும், வா்த்தக அணுகுமுறையும் கவலை கொள்ளும் விதத்தில் 31-மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளதாக அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com