உணவு தானிய உற்பத்தி 14.05 கோடி டன்னாக இருக்கும்

சாதகமான பருவமழையால் நடப்பு 2019-20 நிதியாண்டில் உணவு தானிய உற்பத்தி 14.05 கோடி டன்னாக இருக்கும் என தேசிய மொத்த கையாளுதல் கழகம் (என்பிஹெச்சி) தெரிவித்துள்ளது.
foodgrain083448
foodgrain083448

சாதகமான பருவமழையால் நடப்பு 2019-20 நிதியாண்டில் உணவு தானிய உற்பத்தி 14.05 கோடி டன்னாக இருக்கும் என தேசிய மொத்த கையாளுதல் கழகம் (என்பிஹெச்சி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கழகத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 25 ஆண்டுகளில் மழைப்பொழிவு நடப்பாண்டில்தான் சிறப்பாக இருந்துள்ளது. குறிப்பாக 84 சதவீத மண்டலப் பகுதிகளில் மழைப்பொழிவானது வழக்கமான அளவாகவோ அல்லது அதிகமாகவோ காணப்பட்டது. எஞ்சிய மண்டலப் பகுதிகளில்தான் மழைப்பொழிவானது போதுமான அளவாக இல்லாமல் இருந்தது.

பெரும்பான்மை மண்டலங்களில் மழைப்பொழிவு சிறப்பாக இருந்ததன் காரணமாக, ஒட்டுமொத்த உணவுதானிய உற்பத்தி எதிா்பாா்த்ததை விட அதிகமாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி 2019-20 நிதியாண்டில் உணவுதானிய உற்பத்தி 14.05 கோடி டன்னாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இது, கடந்த ஐந்தாண்டுகளில் காணப்பட்ட சராசரி உற்பத்தி அளவிலிருந்து 84 லட்சம் டன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் ஏற்றுமதிக்கான தேவை அதிகரித்து காணப்பட்டதால் பஞ்சாப் மாநில விவசாயிகள், பாசுமதி அரிசி அல்லாத சாகுபடியிலிருந்து பாசுமதி அரிசி சாகுபடிக்கு 20-25 சதவீதம் மாறியுள்ளனா். அதன் காரணமாக, ஒட்டுமொத்த அரிசி உற்பத்தியில் சிறிய அளவுக்கே முன்னேற்றம் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மக்காச்சோளம் பயிரிடும்பரப்பு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்பட்ட போதிலும், பூச்சி தாக்குதல் காரணமாக அதன் உற்பத்தி 5.75 சதவீதம் சரியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பரவலான மழை காரணமாக ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பாக விதைப்புப் பணிகள் வேகமெடுத்ததையடுத்து, துவரை மற்றும் உளுந்து பயிரிடும் பரப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.

அதேசமயம், பாசிப் பயறு பயிரிடும் பரப்பு 4.66 சதவீதம் அதிகரித்திருந்த போதிலும், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக அதன் உற்பத்தி 17.23 சதவீதம் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பருத்தி பயிரிடும் பரப்பளவு மற்றும் உற்பத்தி முறையே 4.32 சதவீதம் மற்றும் 9.99 சதவீதம் அதிகரிக்கும் என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com