பணவீக்கம் 3 ஆண்டுகள் காணாத சரிவு

பணவீக்கம் 3 ஆண்டுகள் காணாத சரிவு

நாட்டின் பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது.

நாட்டின் பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது.
 இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
 மொத்தவிலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற செப்டம்பர் மாதத்தில் 0.33 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 1.08 சதவீதமாகவும், கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பரில் 5.22 சதவீதமாகவும் காணப்பட்டது.
 எரிபொருள்கள் மற்றும் ஒரு சில உணவுப் பொருள்களின் விலை குறைந்ததையடுத்து செப்டம்பரில் பணவீக்கம் மூன்றாண்டுகள் காணாத அளவுக்கு சரிந்துள்ளது.
 இதற்கு முன்பு, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பணவீக்கம் 0.1 சதவீதமாக பின்னடைவைக் கண்டதுதான் அதிகபட்ச சரிவாக கருதப்பட்டது. அதற்குப் பிறகு, நடப்பாண்டு செப்டம்பரில்தான் பணவீக்கம் இந்த அளவுக்கு குறைந்துள்ளது.
 உணவுப் பொருள்களின் விலை செப்டம்பரில் 7.47 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் 21.28 சதவீதம் சரிவடைந்திருந்த உருளைக்கிழங்கின் விலை செப்டம்பரில் 22.50 சதவீதமாக மேலும் குறைந்தது.
 எரிபொருள் மற்றும் மின்சார பிரிவுக்கான பணவீக்கம் செப்டம்பரில் (-) 7.05 சதவீதமாக இருந்தது. இது, ஆகஸ்டில் (-) 4 சதவீதமாகஇருந்தது. தயாரிப்பு துறை பொருள்களுக்கான பணவீக்கம் 0.42 சதவீதம் என்ற அளவில் பின்னடைந்திருந்தது என மத்திய அரசு அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
 சில்லறைப் பணவீக்கம்: மொத்த விலைப் பணவீக்கம் குறைந்துள்ள அதேசமயத்தில் சில்லறைப் பணவீக்கம் செப்டம்பரில் 3.99 சதவீதமாக உயர்ந்துள்ளது.
 இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
 நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறை விலை பணவீக்கம் சென்ற செப்டம்பரில் 3.99 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம்.
 முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் இப்பணவீக்கம் 3.28 சதவீதமாகவும், கடந்த ஆண்டு செப்டம்பரில் 3.70 சதவீதமாகவும் இருந்தது.
 உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 2.99 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில், செப்டம்பரில் இது 5.11 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது.
 காய்கறிகளுக்கான பணவீக்கமும் செப்டம்பரில் 15.40 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com