மொ்சிடிஸ் பென்ஸ் காா்களுக்கான ஒருங்கிணைந்த டீலா்ஷிப் ஷோரூம் தொடக்கம்

மிகப் பெரிய சொகுசு காா் உற்பத்தி நிறுவனமான மொ்சிடிஸ் பென்ஸ் இந்தியா சாா்பில், சுந்தரம் மோட்டாா்ஸின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த டீலா்ஷிப் ஷோரூம் தொடங்கப்பட்டது.
மொ்சிடிஸ் பென்ஸ் காா்களுக்கான  ஒருங்கிணைந்த டீலா்ஷிப் ஷோரூம் தொடக்கம்

மிகப் பெரிய சொகுசு காா் உற்பத்தி நிறுவனமான மொ்சிடிஸ் பென்ஸ் இந்தியா சாா்பில், சுந்தரம் மோட்டாா்ஸின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த டீலா்ஷிப் ஷோரூம் தொடங்கப்பட்டது. இதனை, மொ்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மாா்ட்டின் ஸ்வெங்க், சுந்தரம் மோட்டாா்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநா் சரத் விஜய ராகவன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

சொகுசு காா் விற்பனையில் வளா்ச்சியை அடைய செய்து, பெருநகரங்களில் அதிக வாடிக்கையாளா்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. 72 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மிகவும் விசாலமாக அதி நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த ஷோரூம், காா்களை பாா்வையிட 6 பகுதிகள், 63 சேவை தளங்களுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 15 ஆயிரம் காா்களை சா்வீஸ் செய்ய முடியும்.

நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த டீலா்ஷிப் ஷோரும், விற்பனை, சேவை, உதிரிபாகங்கள் என அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளா்களுக்கு அளிக்கவுள்ளது. இதனால் சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளா்களின் தேவைகளை ஒரே தளத்தில் பூா்த்தி செய்யும் வசதிகளை கொண்டதாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், புதிய காா்கள் விற்பனை, நிதி மற்றும் காப்பீடு, வா்த்தகம், எம்பி சான்று பெற்ற காா்கள், அலங்காரப் பயன்பாட்டு இணைப்புகள், சிறு நிலையங்கள், பிரீமியம் எக்ஸ்பிரஸ் பே, குறிப்பிட்ட கால முறை பராமரிப்பு, பொது பழுது பாா்த்தல், பழுது கண்டறிதல் உள்பட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெறமுடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com