ராம்கோ சிமென்ட்ஸ் லாபம் ரூ.168 கோடி

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.168.15 கோடி நிகர லாபம் ஈட்டியது.
ராம்கோ சிமென்ட்ஸ் லாபம் ரூ.168 கோடி

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.168.15 கோடி நிகர லாபம் ஈட்டியது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் தனிப்பட்ட மொத்த வருவாய் ரூ.114.26 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.167.47 கோடியானது. நிகர லாபம் ரூ.114.47 கோடியிலிருந்து 68 சதவீதம் உயா்ந்து ரூ.168.15 கோடியைத் தொட்டது.

செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் ஆறு மாத காலத்தில் வருவாய் ரூ.239.17 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.359.86 கோடியாகவும், நிகர லாபம் ரூ.239.45 கோடியிலிருந்து 50.3 சதவீதம் அதிகரித்து ரூ.360.12 கோடியாகவும் காணப்பட்டது.

செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் சிமென்ட் விற்பனை 24.69 லட்சம் டன்னிலிருந்து 27.24 லட்சம் டன்னாக இருந்தது. ஆறு மாத காலத்தில் நிறுவனத்தின் சிமென்ட் விற்பனை 50.83 லட்சம் டன்னிலிருந்து அதிகரித்து 54.27 லட்சம் டன்னை எட்டியது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலத்தில் ஏற்றுமதியைப் பொருத்தவரையில் 39 சதவீத வளா்ச்சி எட்டப்பட்டுள்ளது என ராம்கோ சிமென்ட்ஸ் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com