அந்நிய நேரடி முதலீடு 28 சதவீதம் அதிகரிப்பு

இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) 28 சதவீதம் அதிகரித்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அந்நிய நேரடி முதலீடு 28 சதவீதம் அதிகரிப்பு


இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) 28 சதவீதம் அதிகரித்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் 1,633 கோடி டாலர் (சுமார் ரூ.1.14 லட்சம் கோடி) அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, கடந்த 2018-19-ஆம் நிதியாண்டின் இதே கால அளவில் மேற்கொள்ளப்பட்ட 1,275 கோடி டாலருடன் (சுமார் ரூ.89,250 கோடி) ஒப்பிடுகையில் 28 சதவீதம் அதிகமாகும்.
மதிப்பீட்டுக் காலத்தில்,  சேவை துறையில் 280 கோடி டாலரும், மென்பொருள்-வன்பொருள் துறையில் 224 கோடி டாலரும், தொலைத்தொடர்பு துறையில் 422 கோடி டாலரும், வர்த்தக நடவடிக்கையில் 113 கோடி டாலரும் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரிலிருந்து அதிக அளவாக 533 கோடி டாலர் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மொரீஷியசிலிருந்து 467 கோடி டாலரும், அமெரிக்காவிலிருந்து 145 கோடி டாலரும், நெதர்லாந்திலிருந்து 135 கோடி டாலரும், ஜப்பானிலிருந்து 47.2 கோடி டாலரும் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என அந்தப் புள்ளிவிவரத்தில் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் உள்கட்டமைப்புத் துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு அதிக அளவில் முதலீடு செய்வதற்கு அந்நிய நேரடி முதலீடு என்பது இன்றியமையாத தேவையாக உள்ளது.
அந்நிய முதலீட்டை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் மத்திய அரசு அண்மையில், பிராண்ட் சில்லறை வர்த்தகம், நிலக்கரிச் சுரங்கம், ஒப்பந்த தயாரிப்புத் துறை ஆகியவற்றுக்கான விதிமுறைகளை தளர்வு செய்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com