நாட்டின் பொருள்கள் ஏற்றுமதி ரூ.5.82 லட்சம் கோடியாக அதிகரிக்கும்: எக்ஸிம் வங்கி

நாட்டின் பொருள்கள் ஏற்றுமதி இரண்டாவது காலாண்டில் ரூ.5.82 லட்சம் கோடியாக (8,200 கோடி டாலர்) அதிகரிக்கும் என இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி  (எக்ஸிம் வங்கி) தெரிவித்துள்ளது.


நாட்டின் பொருள்கள் ஏற்றுமதி இரண்டாவது காலாண்டில் ரூ.5.82 லட்சம் கோடியாக (8,200 கோடி டாலர்) அதிகரிக்கும் என இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி  (எக்ஸிம் வங்கி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி மேலும் கூறியுள்ளதாவது:
நடப்பு 201920ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருள்கள் ஏற்றுமதி 8,200 கோடி டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த நிதியாண்டில் இதே கால அளவில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியான 8,140 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 0.6 சதவீதம் அதிகமாகும்.
அதேசமயம், எண்ணெய் சாரா பொருள்களின் ஏற்றுமதி 6,964 கோடி டாலரிலிருந்து 6,948 கோடி டாலராக சற்று குறைய வாய்ப்புள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இப்பொருள்களின் ஏற்றுமதி 0.2 சதவீத அளவுக்கு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக எக்ஸிம் வங்கி தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com