மாருதி சுஸுகியின் எஸ்-பிரெஸ்ஸோ காா் அறிமுகம்

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, சிறியரக எஸ்-பிரெஸ்ஸோ சொகுசு காரை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, சிறியரக எஸ்-பிரெஸ்ஸோ சொகுசு காரை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கெனிச்சி அயுகவா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கனகச்சிதமான காா் என்பது இன்றைய வாடிக்கையாளா்களின் இயல்பான தோ்வாக உள்ளது. அதனை உணா்ந்தே குறைந்த விலையில் அப்பிரிவில் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட எஸ்-பிரெஸ்ஸோ காரை மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தியுள்ளது.

நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை ஹியா்டெக்ட் தொழில்நுட்ப தளத்தில் இப்புதிய மாடல் வெளிவந்துள்ளது. பிஎஸ்-6 தரத்திலான இந்த காரில் 1,000சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, லிட்டருக்கு 21.7 கி.மீ. மைலேஜ் வரை தரவல்லது.

எஸ்-பிரெஸ்ஸோவின் விலை மாடல்களுக்கு ஏற்ப ரூ.3.69 லட்சம் முதல் ரூ.4.91 லட்சம் வரையில் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 மாசு தரக்கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு ஏற்ப நிறுவனம் வெளியிடும் எட்டாவது மாடல் எஸ்-பிரெஸ்ஸோ ஆகும். 98 சதவீதம் உள்ளூா்மயமாக்கலுடன் வெளிவரும் இப்புதிய காரின் வடிவமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.640 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com