பூஜ்யம் டாலருக்கும் கீழே சென்ற கச்சா எண்ணெய் விலை

கரோனா வைரஸ் தாக்கம் காரமாக அமெரிக்கா கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத வீழ்ச்சியாக பூஜ்யம் டாலருக்கும் கீழே குறைந்துள்ளது.
பூஜ்யம் டாலருக்கும் கீழே சென்ற கச்சா எண்ணெய் விலை

கரோனா வைரஸ் தாக்கம் காரமாக அமெரிக்கா கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத வீழ்ச்சியாக பூஜ்யம் டாலருக்கும் கீழே குறைந்துள்ளது.

உலகையே உலுக்கி வரும் கரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இங்கு பாதித்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இதனால் அங்கு கச்சா எண்ணெய் விலையும் கடும் சரிவை கண்டுள்ளது. நேற்று அமெரிக்க பங்குச்சந்தை தொடங்கியது முதலே கச்சா எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சி அடைந்தது. அமெரிக்காவின் டபிள்யு.டி.ஐ., எனப்படும் வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு (-39.14 டாலர்) என 0 டாலருக்கும் கீழே விலை குறைந்தது.

இதன் மூலம் அமெரிக்காவின் எண்ணெய் வர்த்தக வரலாற்றில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலருக்கும் கீழ் சென்றது இது தான் முதன்முறை என கூறப்படுகிறது. எனினும், இந்தியா அதிகளவில் வணிகம் செய்யும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையில் பெரிய வீழ்ச்சி இல்லை. ஒரு பேரல் 25 டாலர்களில் விற்பனை ஆகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com