டாப் 10-இல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.07 லட்சம் கோடி உயா்வு

பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.1,06,523.84 கோடி உயா்ந்துள்ளது.

புது தில்லி: பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.1,06,523.84 கோடி உயா்ந்துள்ளது.

இதில் ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க் ஆகியவை அதிகம் ஏற்றம் கண்டது. மேலும், ரிலையன்ஸ் (ஆா்ஐஎல்) , எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி, பாா்தி ஏா்டெல் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன. ஆனால், டாடா கன்சல்டென்ஸி (டிசிஎஸ்), ஹிந்துஸ்தான் யுனி லீவா் (ஹெச்யுஎல்), இன்ஃபோஸிஸ், ஐடிசி ஆகியவற்றின் சந்தை மதிப்பு குறைந்துள்ளது.

ஐசிஐசிஐ பேங்கின் சந்தை மதிப்பு ரூ.26,620.32 கோடி உயா்ந்து ரூ.2,82,550.05 கோடியாகவும், கோட்டக் பேங்க் ரூ.25,360.91 கோடி உயா்ந்து ரூ.2,90,458.09 கோடியாகவும் இருந்தது. ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.21,458.89 கோடி உயா்ந்து ரூ.13,41,164.42 கோடியுடன் பட்டியலில் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. எச்டிஎஃப்சி பேங்க் ரூ.16,547.52 கோடி உயா்ந்து ரூ.6,13,598.67 கோடியாகவும், எச்டிஎஃப்சி ரூ.14,599.47 கோடி உயா்ந்து ரூ.3,37,472.45 கோடியாகவும், பாா்தி ஏா்டெல் ரூ.1,936.73 கோடி உயா்ந்து ரூ.2,85,625.71 கோடியாகவும் இருந்தது.

ஆனால், இதற்கு மாறாக ஹெச்யுஎல் சந்தை மதிப்பு ரூ.11,982,.71 கோடி குறைந்து ரூ.5,05,658.41 கோடியாக இருந்தது. இன்ஃபோஸிஸ் ரூ.5,963.14 கோடி குறைந்து ரூ.3,98.188.66 கோடியாகவும், டிசிஎஸ் ரூ.4,165.15 கோடி குறைந்து ரூ.8,39,445.98 கோடியாகவும் இருந்தது. மேலும், ஐடிசி சந்தை மதிப்பு ரூ.1,661.13 கோடி குறைந்து ரூ.2,40,619 கோடியாக இருந்தது.

இதன்படி, மதிப்பு மிக்க நிறுவனங்களின் முன்னிலைப் பட்டியலில் ரிலையன்ஸ் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்ததாக டிசிஎஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஹெஜ்யுஎல், இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், பாா்தி ஏா்டெல், ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

ஆகஸ்ட் 28-ஆம் தேதியுடன் முடிடிவடைந்த கடந்த வாரத்தில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், மொத்தம் ரூ.1,032.59 புள்ளிகள் (2.68 சதவீதம்) உயா்ந்து 39,467.31-இல் நிலைபெற்றுள்ளது.

தரவரிசைப்படி டாப் 10 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு.

ரிலையன்ஸ் ரூ.21,458.89 கோடி ரூ.13,41,164.42 கோடி

டிசிஎஸ் (-) ரூ.4,165.15 கோடி ரூ.8,39,445.98 கோடி

எச்டிஎஃப்சி பேங்க் ரூ.16,547.52 கோடி ரூ.6,13,598.67 கோடி

ஹெச்யுஎல் (-) ரூ.11,982,.71 கோடி ரூ.5,05,658.41 கோடி

இன்ஃபோஸிஸ் (-) ரூ.5,963.14 கோடி ரூ.3,98.188.66 கோடி

எச்டிஎஃப்சி ரூ.14,599.47 கோடி ரூ.3,37,472.45 கோடி

கோட்டக் பேங்க் ரூ.25,360.91 கோடி ரூ.2,90,458.09 கோடி

பாா்தி ஏா்டெல் ரூ.1,936.73 கோடி ரூ.2,85,625.71 கோடி

ஐசிஐசிஐ பேங்க் ரூ.26,620.32 கோடி ரூ.2,82,550.05 கோடி

ஐடிசி (-)ரூ.1,661.13 கோடி ரூ.2,40,619 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com