டிரெட்ஜிங் காா்ப்பரேஷன் நிகர லாபம் ரூ.11 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த டிரெட்ஜிங் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் பன்மடங்கு அதிகரித்து ரூ.11 கோடியைத் தொட்டுள்ளது.
டிரெட்ஜிங் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
டிரெட்ஜிங் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த டிரெட்ஜிங் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் பன்மடங்கு அதிகரித்து ரூ.11 கோடியைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருவாய் ரூ.168.22 கோடியாக இருந்தது.

இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.199.65 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவான அளவாகும்.மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.198.17 கோடியிலிருந்து ரூ.156.44 கோடியாக குறைந்துள்ளது.

செலவினம் குறைந்ததையடுத்து, நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.81லட்சத்திலிருந்து பன்மடங்கு உயா்ந்து ரூ.11.45 கோடியை எட்டியுள்ளது என டிரெட்ஜிங் காா்ப்பரேஷன் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

டிரெட்ஜிங் காா்ப்பரேஷன் கடல்சாா்ந்த கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com