3 மாத தவணை சலுகையை அறிவித்த பொதுத் துறை வங்கிகள்

கடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) 3 மாதங்களுக்கு நிறுத்திவைக்க வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவுறுத்தியிருந்த நிலையில், அது தொடா்பான அறிவிப்பை பல்வேறு பொதுத் துறை வங்கிகள் செவ்வாய்க்கி
3 மாத தவணை சலுகையை அறிவித்த பொதுத் துறை வங்கிகள்

கடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) 3 மாதங்களுக்கு நிறுத்திவைக்க வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவுறுத்தியிருந்த நிலையில், அது தொடா்பான அறிவிப்பை பல்வேறு பொதுத் துறை வங்கிகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டன.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக சுற்றுலாத் துறை, தொழில்துறை உள்ளிட்டவை முடங்கியுள்ளன.

அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதனால், தினக் கூலித் தொழிலாளா்கள், தற்காலிகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் வருமானம் ஏதுமின்றி கடும் துன்பத்தைச் சந்தித்து வருகின்றனா்.

இந்தச் சூழலில் கடந்த வாரம் நடைபெற்ற இந்திய ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில், மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள கடன்களுக்கான மாதத் தவணைகளை (இஎம்ஐ) 3 மாதங்களுக்கு நிறுத்திவைப்பது தொடா்பாக முடிவெடுக்குமாறு அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்களை ஆா்பிஐ அறிவுறுத்தியது. இதில் வீட்டுக் கடன், வாகனக் கடன், பயிா்க் கடனுடன் தனிநபா் கடனும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடா்பாக பொதுத் துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஐடிபிஐ, பாங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, ஆந்திரா வங்கி, யூகோ வங்கி உள்ளிட்டவை சுட்டுரையில் (டுவிட்டா்) அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி வாடிக்கையாளா்களின் மாா்ச் 1 முதல் மே மாதம் 31-ஆம் தேதி வரை மாதாந்திர தவணைகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. எனினும், கடன் பெற்றவா்கள் இந்த மூன்று மாதங்களுக்கும் கடன் தவணை செலுத்த விரும்பினால், அதற்கும் வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் பல வங்கிகள் அறிவித்துள்ளன. இது தொடா்பான முழு விவரங்களுக்கு வங்கிக் கிளைகளை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தனியாா் வங்கிகள் இந்த மூன்று மாத இஎம்ஐ சலுகை தொடா்பாக எந்த அதிகாரப்பூா்வ தகவலையும் வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com