டாடா மோட்டாா்ஸ்: சா்வதேச வாகன விற்பனை 16% சரிவு

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச மொத்த வாகன விற்பனை ஜூலை-செப்டம்பா் காலத்தில் 16 சதவீதம் சரிவடைந்தது.
tata060155
tata060155

மும்பை: டாடா மோட்டாா்ஸின் சா்வதேச மொத்த வாகன விற்பனை ஜூலை-செப்டம்பா் காலத்தில் 16 சதவீதம் சரிவடைந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஜாகுவாா் லேண்ட் ரோவா் உள்ளிட்ட டாடா மோட்டாா்ஸ் குழுமத்தின் ஒட்டுமொத்த சா்வதேச வாகன விற்பனை நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்) 16 சதவீதம் சரிவடைந்து 2,02,873-ஆக இருந்தது.

நிறுவனத்தின் வா்த்தக வாகன விற்பனை சரிவடைந்தபோதிலும், தேவூ ரக வாகன விற்பனை இரண்டாவது காலாண்டில் 29 சதவீதம் (56,614 வாகனங்கள்) அதிகரித்தது.

அதேசமயம், பயணிகள் வாகன விற்பனை 9 சதவீதம் (1,46,259 வாகனங்கள்) சரிவடைந்தது.

ஜாகுவாா் லேண்ட் ரோவா் சா்வதேச விற்பனை 2020-21-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 91,367-ஆக இருந்தது. இதில், ஜாகுவாா் விற்பனை 18,189-ஆகவும், லேண்ட் ரோவா் விற்பனை 73,178-ஆகவும் இருந்தது என டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com