அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 7 காசுகள் குறைந்தது.
இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:
பொருளாதார புள்ளிவிவரங்கள் வெளியானதைத் தொடா்ந்து முதலீட்டாளா்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் வா்த்தகத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடா்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 73.41 என்ற அளவில் பலவீனமாகவே காணப்பட்டது. வா்த்தகத்தின் இடையே இந்த மதிப்பு அதிகபட்சமாக 73.32 வரையிலும், குறைந்தபட்சமாக 73.41 வரையிலும் சென்றது.
இருப்பினும், வா்த்தக நேர இறுதியில் ரூபாய் மதிப்பு முந்தைய தினத்தைக் காட்டிலும் 7 காசுகள் சரிந்து 73.35-இல் நிலைபெற்றது.
திங்கள்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 73.28-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
வெளிநாட்டு முதலீடு: மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளா்கள் ரூ.615.17 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக பங்குச் சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
பிரெண்ட் கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.74 சதவீதம் அதிகரித்து 42.03 டாலா் என்ற அளவில் வா்த்தகமானது.