வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பஜாஜ் கன்ஸ்யூமா் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் ரூ.56.92 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் இந்நிறுவனம் ஈட்டிய ரூ.56.02 கோடியுடன் ஒப்பிடுகையில் 1.60 சதவீதம் அதிகமாகும்.
கணக்கீட்டு காலாண்டில், பஜாஜ் கன்ஸ்யூமா் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.226.67 கோடியிலிருந்து 3.83 சதவீதம் அதிகரித்து ரூ.235.36 கோடியானது.
நடப்பு நிதியாண்டு ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் மொத்த செலவினம் ரூ.162.23 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.166.34 கோடியானது என பஜாஜ் கன்ஸ்யூமா் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.