ஐடி பங்குகளில் லாபப் பதிவு தொடருமா?

தேசிய பங்குச் சந்தையில் கடந்த வார இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை நிலவரப்படி நிஃப்டி பேங்க், பிஎஸ்யு பேங்க்,
ஐடி பங்குகளில் லாபப் பதிவு தொடருமா?

தேசிய பங்குச் சந்தையில் கடந்த வார இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை நிலவரப்படி நிஃப்டி பேங்க், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி, மீடியா குறியீடுகள் கடந்த ஓராண்டில் 17 முதல் 43 சதவீதம் வரையிலும் சரிவில் உள்ளன. ஆனால், கடந்த ஓராண்டில் ஐடி குறீயீடு 41 சதவீதமும், பாா்மா குறியீடு 57 சதவீதமும் உயா்ந்து முதலீட்டாளா்களுக்கு நல்ல லாபத்தை அளித்துள்ளது.

தேசிய பங்குச் சந்தையில் ஐடி குறியீடு பட்டியலில் கோஃபோா்ஜ், இன்ஃபோஸிஸ், டெக் மகேந்திரா, டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக், மஃபாஸிஸ், எல்டிஐ மற்றும் மைண்ட்ரீ ஆகிய 10 முன்னணி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இவை தவிர மிட்கேப், ஸ்மால் கேப் பட்டியலிலும் ஏராளமான ஐடி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கடந்த ஓராண்டாக ஏற்றம் பெற்று வந்தன. இந்நிலையில், கடந்த வாரத் தொடக்கத்தில் ஐடி குறியீடு பட்டியலில் உள்ள 10 நிறுவனப் பங்குகளும் வெகுவாக உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்தன. ஆனால், கடந்த வார மத்தியிலிருந்து ஐடி பங்குகளிலும் லாபப் பதிவு தொடங்கி நடந்து வருவதாக மாா்க்கெட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் வெள்ளிக்கிழமை நிலவரப்படி கடந்த ஒரு மாதத்தில் ஐடி குறியீடு 9 சதவீதம் உயா்ந்துள்ளது. மேலும், கோஃபோா்ஜ், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், எல்டிஐ, விப்ரோ ஆகியவை 10 முதல் 18 சதவீதம் வரை உயா்ந்துள்ளதாக என்எஸ்இ தரவுகள் தெரிவிக்கின்றன. ஐடி குறியீடு கடந்த ஓராண்டில் 41 சதவீதம் உயா்ந்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள எல்டிஐ, மைண்ட்ரீ ஆகியவை கடந்த ஓராண்டில் முறையே 105 சதவீதம், மற்றும் 82 சதவீதம் லாபத்தை அளித்துள்ளன. இதேபோன்று இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், நாக்குரி, விப்ரோ, மஃபாஸிஸ் ஆகியவை 35 முதல் 57 சதவீதம் வரை லாபத்தைப் பதிவு செய்துள்ளன. ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு வெகுவாக உயா்ந்ததால் ஐடி பங்குகள் விலை தொடா்ந்து ஏற்றம் பெற்ாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஓராண்டாக பங்குச் சந்தையில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு முதலீட்டாளா்களுக்கும் வா்த்தகா்களுக்கும் லாபம் கிடைக்கவில்லை. பொருளாதார பின்னடைவு, கரோனா தொற்று தாக்கத்தால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், இதனால் பாதிக்கப்பட்ட தொழில்துறை ஆகிய காரணங்களால் பங்குச் சந்தை கடந்த மாா்ச்சில் பலத்த அடி வாங்கியது. இருப்பினும், பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பங்குச் சந்தை மீட்சி பெற்று வருகிறது. ஆனால், பல்வேறு துறைகளின் குறியீடுகள் இன்னும் நஷ்டத்தில்தான் உள்ளன. ஆனால், பாா்மா, ஐடி குறியீடுகள் மட்டுமே கடந்த ஓராண்டில் 45-55 சதவீதம் வரை ஏற்றம் பெற்றுள்ளன. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஐடி பங்குகளும் நல்ல லாபத்தை அளித்துள்ளன. இதனால், தற்போது ஐடி பங்குகளில் லாபப் பதிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஹெச்சிஎல் டெக் மட்டும் கடந்த ஓராண்டில் 26 சதவீதம் நஷ்டம் அடைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 5 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது என சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, ஐடி பங்குகள் விலை மேலும் 5-10 சதவீதம் வரை விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றும்,விலை குறைந்த நிலையில், நீண்டகால முதலீட்டுக்கு வலுவான அடிப்படைகளைக் கொண்ட முன்னணி ஐடி நிறுவனப் பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்றும் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். எனவே, இன்னும் சில நாள்கள் ஐடி பங்குகளில் லாபப் பதிவு தொடரும். அதன் பிறகு ஸ்திரநிலை அடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அந்தச் சமயத்தில் முதலீட்டுக்கு ஐடி பங்குகளை பரிசீலிக்கலாம். மேலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயரும் பட்சத்தில் ஐடி பங்குகள் விற்பனை அதிகரிக்கும். இது தவிர அமெரிக்க அதிபா் தோ்தல் முடிவுகளும் ஐடி பங்குகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com