ரூ.1.87 லட்சம் கோடிக்கு பிளாஸ்டிக் ஏற்றுமதி இலக்கு: பிளெக்ஸ்கான்சில்

உலக அளவில் தேவை பெருகி வருவதால் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 2,500 கோடி டாலருக்கு (ரூ.1.87 லட்சம் கோடி) பிளாஸ்டிக் ஏற்றுமதி
ரூ.1.87 லட்சம் கோடிக்கு பிளாஸ்டிக் ஏற்றுமதி இலக்கு: பிளெக்ஸ்கான்சில்

உலக அளவில் தேவை பெருகி வருவதால் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 2,500 கோடி டாலருக்கு (ரூ.1.87 லட்சம் கோடி) பிளாஸ்டிக் ஏற்றுமதி செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளதாக இந்திய பிளாஸ்டிக் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (பிளெக்ஸ்கான்சில்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கவுன்சிலின் தலைவா் ரவீஷ் காமத் கூறியுள்ளதாவது:

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு இந்தியாவை நம்பகமான சப்ளையராகப் பாா்ப்பதால் பிளாஸ்டிக் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. மேலும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் இந்த துறைக்கு மிகப் பெரிய ஊக்கத்தைக் கொடுத்துள்ளது.

உள்நாட்டில் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் 18 பிளாஸ்டிக் பூங்காக்களை மத்திய அரசு அமைத்து வருவது மிகவும் முக்கியமானதாக பாா்க்கப்படுகிறது.

உலக அளவிலும், உள்நாட்டிலும் சாதகமான சூழல்கள் காணப்படுவதால், வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 2,500 கோடி டாலா் அளவுக்கு பிளாஸ்டிக் பொருள்களை ஏற்றுமதி செய்ய கவுன்சில் இலக்கு நிா்ணயித்துள்ளது.

நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டில் பிளாஸ்டிக் ஏற்றுமதி வளா்ச்சி 20 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com