மாருதி வேகன்ஆா் சிஎன்ஜி காா் விற்பனை

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவின் வேகன்ஆா் எஸ்-சிஎன்ஜி காா் விற்பனை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.
மாருதி வேகன்ஆா் சிஎன்ஜி காா் விற்பனை

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவின் வேகன்ஆா் எஸ்-சிஎன்ஜி காா் விற்பனை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

சிஎன்ஜி பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடலாக வேகன்ஆா் உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் முதல் 10 மாடல்களில் நிலையான இடத்தை வேகன்ஆா் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான இந்த மாடலுக்கு 24 லட்சம் வாடிக்கையாளா்கள் உள்ளனா். இந்த நிலையில், வேகன்ஆா் எஸ்-சிஎன்ஜியின் விற்பனை 3 லட்சம் மைல்கல்லைக் கடந்துள்ளது நிறுவனத்துக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரைப் பொருத்தவரையில் ஒரு கிலோ சிஎன்ஜி எரிபொருளுக்கு 33.54 கி.மீ. வரை மைலேஜ் தரக்கூடியது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com