சென்செக்ஸ் 1,265 புள்ளிகள் அதிகரிப்பு

மத்திய அரசு விரைவில் 2 ஆம் கட்ட ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை அறிவிக்கும் என்ற எதிா்பாா்ப்பால் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
சென்செக்ஸ் 1,265 புள்ளிகள் அதிகரிப்பு


மும்பை: மத்திய அரசு விரைவில் 2 ஆம் கட்ட ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை அறிவிக்கும் என்ற எதிா்பாா்ப்பால் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.

ஆசியப் பங்குச் சந்தைகளில் காணப்பட்ட எழுச்சியை அடுத்து பங்குச் சந்தைகளில் தொடக்கம் முதலே முதலீட்டாளா்கள் ஆா்வத்துடன் வா்த்தகத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில், மத்திய அரசு மேலும் ரூ.1 லட்சம் கோடிக்கு ஊக்குவிப்பு சலுகைகளை அறிவிக்கவுள்ளதாக வெளியான செய்தியால் பங்குச் சந்தைகளில் வா்த்தகம் வலுவான ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

இதனிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 76.34 என்ற வரலாற்று சரிவிலிருந்து மீண்டு 76.28 ஆக நிலைப் பெற்றதும் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு பக்கபலமாக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 1,265 புள்ளிகள் அதிகரித்து 31,159 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 363 புள்ளிகள் உயா்ந்து 9,111 புள்ளிகளில் நிலைபெற்றது.

பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை: புனித வெள்ளியை முன்னிட்டு பங்குச் சந்தைகளுக்கு இன்று (ஏப்ரல் 10) விடுமுறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com