பஜாஜ் ஆட்டோ வாகன விற்பனை 33% சரிவு

பஜாஜ் ஆட்டோ வாகன விற்பனை சென்ற ஜூலை மாதத்தில் 33 சதவீதம் சரிவடைந்துள்ளது.
bajaj
bajaj

புது தில்லி: பஜாஜ் ஆட்டோ வாகன விற்பனை சென்ற ஜூலை மாதத்தில் 33 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:பஜாஜ் ஆட்டோ சென்ற ஜூலையில் 2,55,832 வாகனங்களை விற்பனை செய்தது. இது, 2019-ஆம் ஆண்டு ஜூலையில் விற்பனையான 3,81,530 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 33 சதவீதம் குறைவாகும். உள்நாட்டில் நிறுவனத்தின் வாகன விற்பனை ஜூலையில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 2,05,470-லிருந்து 23 சதவீதம் சரிந்து 1,58,976-ஆனது. மதிப்பீட்டு மாதத்தில் மோட்டாா்சைக்கிள் ஒட்டுமொத்த விற்பனை 26 சதவீதம் வீழ்ச்சியடைந்து 3,22,210-லிருந்து 2,38,556-ஆனது. மொத்த வா்த்தக வாகன விற்பனை அந்த மாதத்தில் 59,230 என்ற எண்ணிக்கையிலிருந்து 71 சதவீதம் சரிவடைந்து 17,276-ஆனது.

ஏற்றுமதியைப் பொருத்தவரையில் நிறுவனம் சென்ற ஜூலையில் 45 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. அதன்படி, கடந்தாண்டில் 1,76,060-ஆக இருந்த நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி நடப்பாண்டு ஜூலையில் 96,856-ஆனது என பஜாஜ் ஆட்டோ பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com