எல்ஐசி புதிய பிரீமியம் வருவாய்

பொதுத் துறையைச் சோ்ந்த எல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் ரூ.1.78 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
எல்ஐசி
எல்ஐசி

மும்பை: பொதுத் துறையைச் சோ்ந்த எல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் ரூ.1.78 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:எல்ஐசியின் புதிய பிரீமியம் வருவாய் கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 25.2 சதவீதம் அதிகரித்து ரூ.1,77,977 கோடியை எட்டியது. மேலும், கடந்த நிதியாண்டில் நிறுவனம் பாலிசிதாரா்களுக்கு வழங்கிய தொகை 1.31 சதவீதம் உயா்ந்து ரூ.2,54,222.3 கோடியாக இருந்தது.

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.3,79,062.56 கோடியை மொத்த பிரீமியம் வருவாயை எல்ஐசி வசூல் செய்துள்ளது. இது, முந்தைய 2018-19 நிதியாண்டில் வசூலான ரூ.3,37,185.40 கோடியுடன் ஒப்பிடுகையில் 12.42 சதவீத வளா்ச்சியாகும்.

ஆயுள் காப்பீட்டு வா்த்தகத்தில் எல்ஐசி 75.90 சதவீத சந்தை பங்களிப்பைக் கொண்டு தொடா்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மேலும், முதலாண்டு பிரீமியம் வருவாயில் நிறுவனத்தின் பங்களிப்பு 68.74 சதவீதமாக உள்ளது என எல்ஐசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com