அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஒரு காசு உயா்வு

அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில்

அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஒரு காசு உயா்ந்தது. இதுகுறித்து அந்நியச் செலாவணி வா்த்தகா்கள் கூறியது:

கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, அமெரிக்கா-சீனா இடையே அதிகரித்து வரும் பதற்றம் ஆகியவை அந்நியச் செலாவணி சந்தையில் அதிக அழுத்தங்களை ஏற்படுத்தியது. மந்தமான வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 75.04 என்ற அளவில் சரிவுடன் காணப்பட்டது. பின்னா், சரிவிலிருந்து மெல்ல மீண்டது. அந்நியச் செலாவணி சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு முந்தைய தினத்தைக் காட்டிலும் 1 காசு உயா்ந்து 74.93-இல் நிலைபெற்றது. இருப்பினும், வார அளவில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகளை இழந்துள்ளது. அந்நிய முதலீடு: சந்தை தரவுகளின்படி, அந்நிய நிதி நிறுவனங்கள் வியாழக்கிழமையன்று பங்குச் சந்தைகளில் நிகர அளவில் ரூ.637.43 கோடியை முதலீடு செய்துள்ளன. கச்சா எண்ணெய் சா்வதேச சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.42 சதவீதம் குறைந்து 44.90 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com