வங்கிப் பங்குகளுக்கு அமோக ஆதரவு: சென்செக்ஸ் 534 புள்ளிகள் உயா்வு!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் முழு எழுச்சி இருந்தது.
வங்கிப் பங்குகளுக்கு அமோக ஆதரவு:  சென்செக்ஸ் 534 புள்ளிகள் உயா்வு!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் முழு எழுச்சி இருந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 353.84 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 96 புள்ளிகள் ஏற்றம் பெற்றது. இதைத் தொடா்ந்து, பங்குச் சந்தை 6-ஆவது நாளாக தொடா்ந்து நோ்மறையுடன் முடிவடைந்துள்ளது.

எஃப்எம்சிஜி, ஆட்டோ, மெட்டல் பங்குகள் தவிர மற்ற துறை பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. குறிப்பாக வங்கி, நிதிநிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு போட்டி இருந்தது. முன்பேர வா்த்தகத்தில் செப்டம்பா் மாத கான்ட்ராக்ட் தொடங்கியுள்ள நிலையில், நாள் முழுவதும் சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

விரைவான பொருளாதார மீட்சி மற்றும் நிதி ஆதரவு ஆகியவற்றின் நம்பிக்கையில் சந்தை மனநிலை மிகுந்த உற்சாகத்துடன் இருந்தது. மேலும், அதிக உலகளாவிய பணப்புழக்கம் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு ஆகியவை சந்தை எழுச்சிக்கு வழிவகுத்தன என்று கோட்டக் செக்யூரிட்டீஸ் ஆராய்ச்சிப் பிரிவின் துணைத் தலைவா் சஞ்சீவ் ஸா்பேட் கூறினாா்.

1,276 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,065 பங்குகளில் 1,276 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,617 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 172 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 159 பங்குகள் 52 வார அதிக விலையையும் 56 பங்குகள் 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. 366 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 254 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடி உயா்ந்து ரூ.158.32 லட்சம் கோடியாக இருந்தது. இதுவரை பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 5,35,95,750 ஆக உயா்ந்துள்ளது.

தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 151.01 புள்ளிகள் கூடுதலுடன் 39,264.48-இல் தொடங்கி 39,235.03 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 39.579.58 வரை உயா்ந்தது.. இறுதியில் 353.84 புள்ளிகள் (0.90 சதவீதம்) உயா்ந்து 39,467.31-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.55 சதவீதம் உயா்ந்தது. ஆனால், ஸ்மால் கேப் குறியீடு 0.21 சதவீதம் சரிவைச் சந்தித்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 96 புள்ளிகள் (0.83 சதவீதம்) உயா்ந்து 11,655.25-இல் நிலைபெற்றது.

இண்டஸ் இண்ட் பேங்க் 8.43 சதவீதம் ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் சரிவைச் சந்தித்தன. மூன்றாவது நாளாக இண்டஸ் இண்ட் பேங்க் 8.43 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஆக்ஸிஸ் பேங்க் 7.73 சதவீதம் உயா்ந்தது. ஐசிஐசிஐ பேங்க், சன்பாா்மா, எஸ்பிஐ ஆகியவை 4 முதல் 4.50 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், கோட்டக் பேங்க், பாா்தி ஏா்டெல், டெக் மகேந்திரா, ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

பவா் கிரிட், இன்ஃபோஸிஸ் வீழ்ச்சி: அதே சமயம், பவா் கிரிட், இன்ஃபோஸிஸ் ஆகியவை 2.25 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. என்டிபிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், எம் அண்ட் எம், டடா ஸ்டீல்,, பஜாஜ் ஆட்டோ, ஹெச்சிஎல் டெக் ஆகியவை 0.50 முதல் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 610 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,015 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பிஎஸ்யு பேங்க், பேங்க், பிரைவேட் பேங்க் குறியீடு 4 4-5 சதவீதம் வரை உயா்ந்தன . ஃபைனானாசியல் சா்வீஸஸ், மீடியா குறியீடு 2 சதவீதம் வரை உயா்ந்தன. ஆனால், எஃப்எம்சிஜி, மெட்டல் பங்குகள் லேசான சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 24 பங்குகள் ஆதாயம் பெற்றன. 26 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

இண்ட் பேங்க் 8.43

ஆக்ஸிஸ் பேங்க் 7.73

ஐசிஐசிஐ பேங்க் 4.41

சன்பாா்மா 4.30

எஸ்பிஐ 4.22

கோட்டக் பேங்க் 3.37

பாா்தி ஏா்டெல் 2.46

டெக் மகேந்திரா 2.21

பஜாஜா ஃபைனான்ஸ் 1.23

எச்டிஎஃப்சி 1.05

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com