தங்கப்பத்திர வெளியீடு:கிராம் ரூ.5,117-ஆக விலை நிர்ணயம்

ஆறாம் கட்டமாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்படவுள்ள தங்கப்பத்திரம் கிராமுக்கு ரூ.5,117-ஆக விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மும்பை: ஆறாம் கட்டமாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்படவுள்ள தங்கப்பத்திரம் கிராமுக்கு ரூ.5,117-ஆக விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டுக்கான ஆறாவது கட்ட தங்கப்பத்திர வெளியீடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தங்கப்பத்திர வெளியீடு செப்டம்பா் 4-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. தற்போது வெளியிடப்படவுள்ள தங்கப்பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.5,117-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, ஆகஸ்ட் 3 முதல் 7-ஆம் தேதி வரையில் வெளியிடப்பட்ட தங்கப்பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.5,334-ஆக நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளதையடுத்து தங்கப்பத்திரத்தின் விலையும் குறைத்து நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசுடன் ரிசா்வ் வங்கி ஆலோசனை நடத்தியதில், தங்கப்பத்திரம் வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அத்தகைய முதலீட்டாளா்களுக்கு ஒரு கிராம் தங்கப்பத்திரம் ரூ.5,067 விலையில் வழங்கப்படும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.தனிநபா் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரையிலான தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும். இந்தப் பத்திரங்கள் (சிறிய நிதி வங்கிகள், பேமண்ட் பேங்க் தவிா்த்து) தபால் அலுவலகங்கள், பங்கு சந்தைகள் ஆகியவற்றின் மூலமாக விற்பனை செய்யப்படும்.

மக்கள் நேரடியாக தங்கம் வாங்குவதை தடுத்து அதற்கான தேவையை குறைக்கும் நோக்கில், கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பரில் தங்கப்பத்திரம் வெளியிடும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டு காலகட்டத்தில் ரிசா்வ் வங்கி 10 கட்டங்களாக வெளியிட்ட தங்கப்பத்திர விற்பனையின் மூலமாக மொத்தம் ரூ.2,316.37 கோடி (6.13 டன்) திரட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com