சமையல் எண்ணெய்:தரத்தை உறுதி செய்ய எஃப்எஸ்எஸ்ஏஐ நடவடிக்கை

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் தரத்தை உறுதி செய்ய மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருவதாக உணவு பாதுகாப்பு அமைப்பான எஃப்எஸ்எஸ்ஏஐ தெரிவித்துள்ளது.
சமையல் எண்ணெய்
சமையல் எண்ணெய்

புது தில்லி: நாடு முழுவதும் சமையல் எண்ணெய் தரத்தை உறுதி செய்ய மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருவதாக உணவு பாதுகாப்பு அமைப்பான எஃப்எஸ்எஸ்ஏஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் கலப்படமில்லா சமையல் எண்ணெய் கிடைப்பதை உறுதி செய்ய ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சமையல் எண்ணெய் தரத்தை பரிசோதிப்பதற்காக நாடு தழுவிய அளவில் 4,500 சமையல் எண்ணெய் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

இதில், 16 வகையான சமையல் எண்ணெய் வகைகள் அடங்கும். குறிப்பாக, கடுகு, தேங்காய், பாமாயில், ஆலிவ் மற்றும் பிளெண்டட் எண்ணைய்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த தரப் பரிசோதனையின் முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பிராண்டட் மற்றும் பிராண்ட் இல்லாத சமையல் எண்ணெய் விற்பனையில் கலப்படத்தை தடுப்பதற்கான சோதனைகளை நாடு முழுவதும் தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் எஃப்எஸ்எஸ்ஏஐ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com