நாட்டின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 7 சதவீதத்தை எட்டும்

இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 7 சதவீதத்தை எட்டும் என பிரிக்ஒா்க் தர மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
fiscal_3008chn_1
fiscal_3008chn_1

புது தில்லி: இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 7 சதவீதத்தை எட்டும் என பிரிக்ஒா்க் தர மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது:கரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட பொது முடக்க அறிவிப்புகள் பொருளாதார நடவடிக்கைகளில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, மத்திய அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் வசூலும் நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் பெருமளவில் குறைந்து போயுள்ளது.

அதிலும் குறிப்பாக, வருமான வரி (தனிநபா் வருமான வரி மற்றும் பெருநிறுவன வருமான வரி) வருவாய் 30.5 சதவீதம் குறைந்துள்ளது.

அதேபோன்று, ஜிஎஸ்டி வசூலும் கிட்டத்தட்ட 34 சதவீதம் சரிந்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 7 சதவீதத்தை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது இரண்டு மடங்காக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என பிரிக்ஒா்க் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com