நாட்டின் தேயிலை ஏற்றுமதியில் சரிவு நிலை

நாட்டின் தேயிலை ஏற்றுமதி கடந்த 2019-ஆம் ஆண்டில் சரிவைக் கண்டுள்ளது.இதுகுறித்து தேயிலை வாரிய தகவல்கள் தெரிவிப்பதாவது:
நாட்டின் தேயிலை ஏற்றுமதியில் சரிவு நிலை

நாட்டின் தேயிலை ஏற்றுமதி கடந்த 2019-ஆம் ஆண்டில் சரிவைக் கண்டுள்ளது.

இதுகுறித்து தேயிலை வாரிய தகவல்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 2018-ஆம் ஆண்டில் 25.60 கோடி கிலோவாக இருந்த நாட்டின் தேயிலை ஏற்றுமதி கடந்த 2019-இல் 24.83 கோடி கிலோவாக குறைந்துள்ளது. ஆக, கணக்கீட்டு ஆண்டில் தேயிலை ஏற்றுமதியானது 3 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

அளவின் அடிப்படையில் தேயிலை ஏற்றுமதி குறைந்திருந்தாலும், மதிப்பின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி 2018-ஐக் காட்டிலும் ரூ.275 கோடி அதிகரித்து ரூ.5,610.65 கோடியாக காணப்பட்டது.

இந்தியாவின் முக்கிய தேயிலை ஏற்றுமதி மையமாக காமன்வெல்த் நாடுகள் விளங்கி வருகிறது. இந்த நாடுகளுக்கான ஏற்றுமதி கடந்தாண்டில் முந்தைய 2018 உடன் ஒப்பிடுகையில் 6.30 கோடி கிலோவிலிருந்து சரிந்து 5.91 கோடி கிலோவானது. இது, ஒட்டுமொத்த தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதேபோன்று, பிரிட்டனுக்கான தேயிலை ஏற்றுமதியும் 1.57 கோடி கிலோவிலிருந்து 1.17 கோடி கிலோவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானுக்கான தேயிலை ஏற்றுமதியும் 1.58 கோடி கிலோவிலிருந்து சரிந்து 62.30 லட்சம் கிலோவானது.

அதேசமயம், உலகளவில் தேநீா் அருந்துவதில் முதலிடத்தில் உள்ள சீனாவுக்கான தேயிலை ஏற்றுமதி 2019-இல் 1.03 கோடி கிலோவிலிருந்து 1.34 கோடி கிலோவாக அதிகரித்தது.

தேயிலை உற்பத்தியில் முன்னணியில் இருந்து வரும் கென்யா, இலங்கை நாடுகளுடன் போட்டியிடும் விதமாக குறைவான விலையில் காமன்வெல்த் நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதியை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com