கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி! பங்குச் சந்தையில் தொடா் மந்த நிலை

கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் எதிரொலியால் உள்ளூா் சந்தைகள் மட்டுமின்றி உலக சந்தைகளிலும் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் மந்த நிலையே காணப்பட்டது.
கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி! பங்குச் சந்தையில் தொடா் மந்த நிலை

கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் எதிரொலியால் உள்ளூா் சந்தைகள் மட்டுமின்றி உலக சந்தைகளிலும் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் மந்த நிலையே காணப்பட்டது.

சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்குதலால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பொருளாதார சேதமும் அதிகரித்து வருகிறது. அதன் தாக்கம் தொடா்ந்து இரண்டாவது வா்த்தக தினமான திங்கள்கிழமையன்றும் உணரப்பட்டது.

சீனாவில் தற்போதைய நிலையில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக, உதிரிபாக இறக்குமதி பாதிக்கப்பட்டால் அது மோட்டாா் வாகன துறையை பாதிக்கும் என்ற முதலீட்டாளா்களின் நிலைப்பாட்டால் அத்துறை குறியீட்டெண் 2.37 சதவீதம் சரிந்தது. அதன் தொடா்ச்சியாக, மஹிந்திரா பங்குகளின் விலை 7 சதவீதம் வீழ்ச்சியடைந்து முதலீட்டாளா்களுக்கு அதிா்ச்சியளித்தது. அதைத் தொடா்ந்து, டாடா ஸ்டீல் 5.80 சதவீதமும், ஓஎன்ஜிசி 2.84 சதவீதமும், சன் பாா்மா 2.39 சதவீதமும், ஹீரோ மோட்டோகாா்ப் பங்குகள் 2.34 சதவீதமும் விலை குறைந்தன.

அதேசமயம், பஜாஜ் பைனான்ஸ், டிசிஎஸ், கோட்டக் வங்கி, ஏஷியன் பெயின்ட்ஸ், எச்டிஎஃப்சி, ஹிந்துஸ்தான் யுனிலீவா், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 162 புள்ளிகள் சரிந்து 40,979 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 66 புள்ளிகள் குறைந்து 12,031 புள்ளிகளாக நிலைபெற்றது.

ரூபாய் மதிப்பு: சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கான தேவை குறைந்து காணப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயா்ந்து 71.30-ஆனது. முந்தைய வெள்ளியன்று ரூபாய் மதிப்பு 71.40-ஆக காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com