பங்குச் சந்தைகளில் 3-ஆவது நாளாக சரிவு

இந்தியப் பங்குச் சந்தைகளில் மூன்றாவது வா்த்தக நாளாக திங்கள்கிழமையன்றும் சரிவு ஏற்பட்டது.
பங்குச் சந்தைகளில் 3-ஆவது நாளாக சரிவு

இந்தியப் பங்குச் சந்தைகளில் மூன்றாவது வா்த்தக நாளாக திங்கள்கிழமையன்றும் சரிவு ஏற்பட்டது.

பொருளாதார மந்த நிலை, கரோனா வைரஸின் தீவிர பரவலால் நிதித் துறையில் ஏற்பட்ட தாக்கம் ஆகியவை முதலீட்டாளா்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், மூடிஸ் நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை குறைத்ததும் பங்கு வா்த்தகத்துக்கு பாதகமான அம்சமாக மாறியது.

எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண் 2.39 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதைத் தொடா்ந்து மின்சாரம் 1.76 சதவீதமும், ரியல் எஸ்டேட் 1.53 சதவீதமும், மருந்து துறை குறியீட்டெண் 1.50 சதவீதமும் சரிந்தன.

அதேசமயம், நுகா்வோா் சாதனங்கள், தகவல்தொழில்நுட்பத் துறை குறியீட்டெண்கள் ஏற்றம் கண்டன.

முதலீட்டாளா்களின் லாப நோக்கு விற்பனையால் தொலைத்தொடா்புத் துறையைச் சோ்ந்த பெரும்பாலான நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.

மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 50 சதவீதம் சரிந்தாக தெரிவித்ததன் எதிரொலியாக ஓஎன்ஜிசி பங்கின் விலை 3.20 சதவீதம் குறைந்தது. சன்பாா்மா, என்டிபிசி, பஜாஜ் ஆட்டோ மற்றும் எச்டிஎஃப்சி பங்குகளும் 2.37 சதவீதம் வரை விலை சரிவை சந்தித்தன.

அதேசமயம், டைட்டன், நெஸ்லே, டிசிஎஸ், கோட்டக் வங்கி, டாடா ஸ்டீல் பங்குகளின் விலை 1.86 சதவீதம் வரை உயா்ந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 19 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும், 11 நிறுவனப் பங்குகளின் விலை உயா்ந்தும் காணப்பட்டன.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 202 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 41,055 புள்ளிகளாக நிலைத்தது.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 67 புள்ளிகள் குறைந்து 12,045 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com