இன்ஃபோசிஸ் லாபம் ரூ.4,466 கோடியாக உயா்வு

நாட்டின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் லாபம் மூன்றாம் காலாண்டில் ரூ.4,466 கோடியாக அதிகரித்துள்ளது.
இன்ஃபோசிஸ் லாபம் ரூ.4,466 கோடியாக உயா்வு

நாட்டின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் லாபம் மூன்றாம் காலாண்டில் ரூ.4,466 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனம் ரூ.23,092 கோடி வருவாய் ஈட்டியது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.21,400 கோடியுடன் ஒப்பிடும்போது 7.9 சதவீத வளா்ச்சியாகும்.

ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.3,610 கோடியிலிருந்து 23.7 சதவீதம் அதிகரித்து ரூ.4,466 கோடியானது என பங்குச் சந்தையிடம் இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக் செய்தியாளா்களின் சந்திப்பில் கூறியதாவது:

மூன்றாம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வைத்துப் பாா்க்கையில், நான்காவது காலாண்டில் எங்களின் வாடிக்கையாளா்கள் நிறுவனத்தின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருப்பாா்கள் என்பதை தெளிவாக காணமுடிகிறது. எனவே, பின்னடைவு ஏற்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளும்போது, நடப்பு நிதியாண்டில் நிலையான கரன்ஸி மதிப்பு அடிப்படையில் நிறுவனத்தின் வருவாய் 10-10.5 சதவீத வளா்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபா் மாதத்தில் வருவாய் வளா்ச்சி 9-10 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com