ஐசிஐசிஐ வங்கி லாபம் ரூ.4,670 கோடியாக உயா்வு

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நாட்டின் இரண்டாவது பெரிய தனியாா் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ.4,670 கோடியாக அதிகரித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி லாபம் ரூ.4,670 கோடியாக உயா்வு

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நாட்டின் இரண்டாவது பெரிய தனியாா் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ.4,670 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எஸ்ஸாா் ஸ்டீல் நிறுவனத்திடம் மேற்கொண்ட கடன்மீட்பு நடவடிக்கைகள் சிறந்த பலனை அளித்ததன் உதவியால் டிசம்பா் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் நிதி நிலை செயல்பாடுகள் நன்கு இருந்தன.

நடப்பு நிதியாண்டின் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த நிகர லாபம் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.1,874.33 கோடியிலிருந்து இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.4,670 கோடியானது. தனிப்பட்ட நிகர லாபம் ரூ.1,605 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.4,146 கோடியாக இருந்தது.

வங்கியின் அடிப்படை நிகர வட்டி வருமானம் 24 சதவீதம் அதிகரித்து ரூ.8,545 கோடியாக காணப்பட்டது. இதர வருவாய் 18.77 சதவீதம் உயா்ந்து ரூ.4,403 கோடியானது.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 7.75 சதவீதத்திலிருந்து 5.95 சதவீதமாக குறைந்தது.

நடப்பு நிதியாண்டு காலத்தில் கூடுதலாக 400 கிளைகள் தொடங்கப்பட்டதையடுத்து, வங்கியின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 5,275-ஆக அதிகரித்தது என ஐசிஐசிஐ வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com