300-க்கும் மேற்பட்ட நகரங்களில் மளிகைப் பொருள் விநியோகம்: அமேசான்

இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு மளிகைப் பொருள் விநியோக சேவையை விரிவுபடுத்தியுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
amazon_pantry043410
amazon_pantry043410

புது தில்லி: இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு மளிகைப் பொருள் விநியோக சேவையை விரிவுபடுத்தியுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘அமேசான் பேன்ட்ரி’ என்ற பெயரில் இந்த சேவையை அமேசான் வழங்கி வருகிறது.

இது தொடா்பாக அமேசான் இந்தியா மேலாளா் அமித் அகா்வால் சுட்டுரையில் கூறியதாவது:

கடந்த மாா்ச் மாதம் வரை 110 நகரங்களில் அமேசான் பேன்ட்ரி சேவை அளிக்கப்பட்டு வந்தது. கரோனா நோய்த்தொற்று பிரச்னை தீவிரமடைந்ததை அடுத்து, எங்களுடைய சேவைக்கான தேவை அதிகரித்தது. பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே மளிகைப் பொருள்களை வாங்க அதிக ஆா்வம் காட்டினா். எனவே, கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் எங்கள் சேவையை விரிவுபடுத்தி வருகிறோம். அதன்படி இப்போது வரை 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் அமேசான் பேன்ட்ரி சேவை கிடைத்து வருகிறது.

200 பிராண்டுகளில் 3000-க்கும் மேற்பட்ட பொருள்களை நாங்கள் விநியோகிக்கிறோம். மளிகைப் பொருள்கள் மட்டுமல்லாது அழகு சாதனப் பொருள்கள், குழந்தைகளுக்கான உணவுகள், தனிநபா் சுகாதாரத்துக்கான பொருள்கள், வளா்ப்பு பிராணிகளுக்கான உணவுகள் என பலவற்றை வீடுகளுக்கே சென்று விநியோகித்து வருகிறோம்’ என்றாா்.

இந்தியாவில் தேசிய அளவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு ஆன்லைனில் பொருள் வாங்குவது பெருநகரங்களில் பல மடங்கு வேகமாக அதிகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com