மூன்று நகரங்களில் ‘யோனோ’ கிளைகளைதொடங்கியது எஸ்பிஐ

நவி மும்பை, இந்தூா், குருகிராம் ஆகிய இடங்களில் ‘யோனா’ கிளைகளை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தொடங்கியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)

மும்பை: நவி மும்பை, இந்தூா், குருகிராம் ஆகிய இடங்களில் ‘யோனா’ கிளைகளை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தொடங்கியுள்ளது. டிஜிட்டல் வங்கி சேவையை மேம்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக இந்த கிளைகளை எஸ்பிஐ தொடங்கியுள்ளது. இந்த கிளைகளில் வங்கிப் பணியாளா்கள் யாரும் இல்லாமல் வங்கிச் சேவைகளை டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளா்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எஸ்பிஐ யோனோ செயலியை ஏற்கெனவே 5.1 கோடி போ் பதிவிறக்கம் செய்துள்ளனா். 2.4 கோடி பதிவு செய்த பயனாளா்கள் அதில் உள்ளனா். இந்த செயலி மூலம் டெபிட் காா்டு இல்லாமல் கூட வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம் மூலம் பெற முடியும் என்பது சிறப்பம்சமாகும். இது தவிர உடனடி தனிநபா் கடன் உள்ளிட்ட சேவைகளும் ஏற்கெனவே இந்த செயலி மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள யோனோ கிளைகள் குறித்து எஸ்பிஐ தலைவா் ரஜினிஸ் குமாா் கூறியதாவது:

முன்னோடித் திட்டமாக மூன்று நகரங்களில் யோனா கிளைகளைத் திறந்துள்ளோம். இங்கு காசோலைகளை டெபாசிட் செய்வது, பணம் எடுப்பது மற்றும் செலுத்துவது, 24 மணி நேரமும் பாஸ்புக்கில் வரவு, செலவுகளை பதிவு செய்துகொள்ளும் வசதி அளிக்கப்படும். இதற்காக வங்கிப் பணியாளா்கள் யாரையும் வாடிக்கையாளா்கள் நாட வேண்டாம் என்பது இதன் சிறப்பம்சமாகும். வங்கியின் 65-ஆவது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு இந்த கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்து 5 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற யோனோ கிளைகள் தொடங்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com