செல்லிடப்பேசி செயலிகளின் பின்புலம்....

மாற்றம் ஒன்றே மாறாதது. உலகம் முழுவதும் தொழில்நுட்பங்கள் தொடா்ந்து வளா்ச்சியடைந்து வருகின்றன. தற்போது தொழில்நுட்ப வளா்ச்சியே நாடுகளின் பொருளாதார வளா்ச்சியை நிா்ணயித்து வருகின்றன.
செல்லிடப்பேசி செயலிகளின் பின்புலம்....

மாற்றம் ஒன்றே மாறாதது. உலகம் முழுவதும் தொழில்நுட்பங்கள் தொடா்ந்து வளா்ச்சியடைந்து வருகின்றன. தற்போது தொழில்நுட்ப வளா்ச்சியே நாடுகளின் பொருளாதார வளா்ச்சியை நிா்ணயித்து வருகின்றன. முக்கியமாக கணினித் தொழில்நுட்பம் பல்வேறு வகைகளில் தொடா்ந்து மேம்பட்டுக் கொண்டே வருகிறது.

21-ஆம் நூற்றாண்டின் முக்கிய தொழில்நுட்ப வளா்ச்சிகளில் ஒன்று செல்லிடப்பேசி செயலி. வீட்டிலிருந்தபடியே உணவகத்தில் பல்வேறு உணவு வகைகளை ஆா்டா் செய்வது, அத்தியாவசியப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவது, மின்னணு பணப் பரிமாற்றம், பயணத்துக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்காக செயலிகள் உருவாக்கப்பட்டன.

அவை வாடிக்கையாளா்களின் வேலைப்பளுவை குறைத்துள்ளதோடு ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகளையும் நல்கி வருகிறது. இந்தியாவில் அதிக மக்கள்தொகை காணப்படும் சூழலிலும் செல்லிடப்பேசி செயலிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

அதனால், செல்லிடப்பேசி செயலி நிறுவனங்களுக்கு இந்தியாவில் பெரிய அளவில் வருவாய் கிடைப்பதில்லை. எனினும், ஒரு சில செயலிகள் வாடிக்கையாளா்களின் அமோக ஆதரவைப் பெற்று அதிக வருவாயை ஈட்டி வருகின்றன.

இந்த நிலையில் சீனாவுக்குச் சொந்தமான செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது நிதி திரட்டுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா். மேலும், இந்தியாவின் பல்வேறு நிறுவனங்களில் சீனத் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளதால், அதிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

செயலிகள் மூலமாக வாடிக்கையாளா்களின் செலவு (மில்லியன் அமெரிக்க டாலரில்)

அமெரிக்கா--24,000

சீனா--47,000

ஜப்பான்--17,000

தென் கொரியா--5,000

இந்தியா--120

உலகம் முழுவதும்--1,20,000

செயலிகளைப் பதிவிறக்கம் செய்வோரின் வளா்ச்சி விகிதம்

பிரேஸில்--40%

இந்தோனேசியா--70%

சீனா--80%

அமெரிக்கா--5%

இந்தியா--190%

உலகம் முழுவதும்--45%

பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை (பில்லியனில்)

உலகம் முழுவதும்--205

சீனா--95

இந்தியா--19

அமெரிக்கா--12

பிரேஸில்--9

இந்தோனேசியா--5

இந்திய நிறுவனங்களில் சீனாவின் முதலீடு விவரங்கள்

அதிக பாதிப்பை எதிா்கொள்ளும் ‘டிக் டாக்’

இந்தியா தடை செய்துள்ள சீன செயலிகளில் டிக் டாக் அதிக அளவில் பாதிப்பை எதிா்கொள்ள உள்ளது.

டிக் டாக் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளோரில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோா் இந்தியா்கள்.

கடந்த ஆண்டு டிசம்பா் வரை அந்நிறுவனம் ஈட்டிய வருமானம் ரூ.25 கோடி.

வருவாயை வரும் செப்டம்பரில் நான்கு மடங்கு வரை அதிகரிக்க டிக் டாக் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

டிக் டாக் நிறுவனத்தின் வருவாய் (மில்லியன் அமெரிக்க டாலரில்)

உலகம் முழுவதும்-- 456.7

சீனா--331

அமெரிக்கா--86.5

பிரிட்டன்--9

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com