கரோனா தந்த ஏமாற்றம்: புத்​து​யிர் பெறுமா "ஐபிஓ' சந்தை

கரோனா பர​வ​லைத் தடுக்க அறி​விக்​கப்​பட்ட பொது முடக்​கம் கார​ண​மாக கார்ப்​பரேட் இந்​தியா கடு​மை​யான சவாலை சந்​தித்​துள்​ளது.
கரோனா தந்த ஏமாற்றம்: புத்​து​யிர் பெறுமா "ஐபிஓ' சந்தை


கரோனா பர​வ​லைத் தடுக்க அறி​விக்​கப்​பட்ட பொது முடக்​கம் கார​ண​மாக கார்ப்​பரேட் இந்​தியா கடு​மை​யான சவாலை சந்​தித்​துள்​ளது. தொழில் துறை முடங்​கி​யது.  பங்கு சந்​தை​யும்  ஏற்​ற}​இ​றக்​கத்​து​டன் கணிக்க முடி​யாத நிலை​யில் உள்​ளது. மொத்​தத்​தில் உல​க​ளா​விய நிலை​யில் அனைத்​தை​யும் புரட்​டிப் போட்டு​விட்​டது கரோனா. இதற்கு  ஐபிஓ (Intial Public Offering) என்று அழைக்​கப்​ப​டும்  முதல் நிலைச் சந்​தை​யும்  விதி விலக்கு அல்ல. அதா​வது கரோனா தாக்​கத்​தால் முதல் நிலைச் சந்​தைக்கு மவுசு  மிக​வும் குறைந்​து​விட்​ட​தாக புள்​ளி​வி​வர தர​வு​கள் தெரி​விக்​கின்​றன. உண்​மை​யில் சொல்​லப்​போ​னால், 2020-இன் முதல் ஆறு மாதங்​கள், 2012-க்குப் பிறகு ஐபிஓ சந்​தைக்கு மோச​மான காலங்​க​ளில் ஒன்​றாக அமைந்​துள்​ளது. 

இந்த காலண்​டர் ஆண்​டின் முதல் பாதி​யில் மொத்​தம் 17 நிறு​வ​னங்​கள் முதல் நிலைச் சந்​தை​யில் பட்டி​ய​லி​டப்​பட்​டுள்​ளன.  இதில் எஸ்​பிஐ கார்ட்ஸ் அண்ட் பேமெண்ட் சர்​வீ​ஸஸ் ஒன்​று​தான் பெரிய நிறு​வ​ன​மா​கும்.  எஞ்​சி​யுள்ள 16 நிறு​வ​னங்​க​ளும் சிறு மற்​றும் நடுத்​தர நிறு​வ​னங்​கள் பட்டி​ய​லில் வரு​கின்​றன. இவற்​றில் எஸ்​பிஐ கார்ட்ஸ் உள்​பட 8  நிறு​வ​னங்​கள் தற்​போது ஐபிஓ விலையை விட கீழே வர்த்​த​க​மாகி வரு​கி​ற​து.​க​டந்த ஆண்டு இதே காலத்​தில் 35 நிறு​வ​னங்​கள் முதல் நிலைச் சந்​தை​யில் பட்டி​ய​லி​டப்​பட்​டன. இதில் 7 நிறு​வ​னங்​கள் பெரிய நிறு​வ​னங்​க​ளா​கும்.

எஸ்​பிஐ கார்ட்ஸ் அறி​மு​கத்​துக்​குப் பிறகு ஐபி​ஓக்​க​ளைத் தொடங்க பல நிறு​வ​னங்​கள் திட்ட​மிட்​டி​ருந்​தன. ஆனால், கரோனா பர​வல் அந்த உணர்​வுக்​குத் தடை​யாக அமைந்​து​விட்​டது. கரோ​னா​வைத் தொடர்ந்து உலக அள​வில் அம​லுக்கு வந்த பொது முடக்​கத்​தால் பொரு​ளா​தார நட​வ​டிக்​கை​க​ளில் பெரும் பின்​ன​டைவு ஏற்​பட்​டது. இதன்  தாக்​கம் கார​ண​மாக, இந்​தியா உள்​பட உல​க​ளா​விய பங்​குச் சந்​தை​கள் கடும் சரி​வைச் சந்​தித்​தன. இத​னால்,  கடந்த  மார்ச் மாதத்​தில் மட்டும் சென்​செக்ஸ், நிஃப்டி ஆகிய குறி​யீ​டு​கள் ஜன​வ​ரி​யில் பதிவு செய்த தங்​க​ளது உச்​ச​பட்ச அள​வி​லி​ருந்து தலா 40 சத​வீ​தத்தை இழந்​தது.

மேலும், கரோனா தொற்று பர​வல் உலக அள​வில் பணப்​பு​ழக்​கத்தை பெரு​ம​ளவு குறைத்​து​விட்​டது. இத​னால், எஸ்​பிஐ கார்ட்ஸ் பட்டி​ய​லான பிறகு முதல் நிலைச் சந்தை பாலை​வ​னம் போல ஆகி​விட்​டது. இத​னால், முதல் நிலைச் சந்​தைக்​கென உள்ள முத​லீட்​டா​ளர்​கள் கடும் ஏமாற்​றம் அடைந்​துள்​ள​னர். கரோனா பாதிப்பு பொரு​ளா​தார நட​வ​டிக்​கை​க​ளுக்கு முட்டுக்​கட்டை போட்டு​விட்​டது. மேலும், பங்​குச் சந்​தை​யில் ஏற்​றம், இறக்​கம் வெகு​வாக அதி​க​ரித்​துள்​ளது. நிதிச் சந்​தை​யில் நிச்​ச​ய​மற்ற தன்​மை​யும், அச்​ச​மும் தொற்​றிக் கொண்​டுள்​ளது. இது போன்ற கார​ணங்​கள் முதல் நிலைச் சந்​தைக்கு பெரும் பாத​க​மாக அமைந்​து​விட்​டது என்று நிபு​ணர்​கள் கூறு​கின்​ற​னர். ஐபிஓ வெளி​யி​டும் நிறு​வ​னங்​க​ளின் புர​மோட்​டர்​கள் பின்​வாங்​கி​யது, பல​வீ​ன​மான இரண்​டாம் நிலைச் சந்தை உணர்வு மற்​றும் சந்தை சார்ந்த கவ​லை​கள் உள்​ளிட்​டவை முதல்​நி​லைச் சந்தை முத​லீட்​டா​ள​ரின் உணர்​வு​க​ளைக் கடு​மை​யா​கப் பாதித்​தி​ருக்​க​லாம் என்று நிபு​ணர்​கள் கரு​து​கின்​ற​னர்.

பிப்​ர​வ​ரி-மார்ச்​சில் ஏற்​பட்ட சந்தை வீழ்ச்​சிக்​குப் பின்​னர், அரசு பொரு​ளா​தா​ரத்​தைத் திறக்​கத் தொடங்​கி​ய​தும், பொது முடக்​கத்தை கட்டுப்​பாட்டு மண்​ட​லங்​க​ளுக்கு மட்டுமே கட்டுப்​ப​டுத்​தி​ய​தும் சந்தை மேல் நோக்​கிய பய​ணத்​தைத் தொடங்​கி​யது. ஆனால், ஐபிஓ சந்தை இன்​னும் புத்​து​யிர் பெறா​மல் உள்​ளது. இந்​நி​லை​யில், சந்தை மற்​றும் பொரு​ளா​தார நட​வ​டிக்​கை​கள் உறு​திப்​ப​டுத்​தப்​பட்​டால் மட்டுமே இந்த ஆண்​டின்  இரண்​டாம் பாதி​யி​லா​வது  முதல்​நி​லைச் சந்தை புத்​து​யிர் பெறக்​கூ​டும் என்று நிபு​ணர்​கள் கரு​து​கின்​ற​னர்.

இதற்​கி​டையே,  தற்​போது ஏற்ற, இறக்க நிலை​கள் குறைந்து முக்​கி​யக் குறி​யீ​டு​கள் மீண்​டும் ஏறு​மு​கம் காண்​ப​தால், இந்த ஆண்​டின்  இரண்​டாம் பாதி​யில் தொழில்​நுட்​பம், மருந்து, சுகா​தா​ரம்  ஆகிய துறை​க​ளில் ஐபிஓ செயல்​பாடு தொடங்​கக்​கூ​டும் என்று கேபி​டல் வியா குளோ​பல் ரிசர்ச் தெரி​வித்​துள்​ளது. 

"தற்​போ​தைய சூழ்​நி​லை​யில், முதல் நிலைச் சந்தை உத்​வே​கம் பெறு​வது கடி​னம்​தான். முதல்​நி​லைச் சந்​தைக்கு பங்​கேற்​பா​ளர்​க​ளின் ஆத​ரவு கிடைப்​பது மிக​வும் கடி​ன​மாக உள்​ளது'  என்று மார்க்கெட் வட்டா​ரத்​தில் பேசப்​ப​டு​கி​றது.  ஒரு​வேளை பொரு​ளா​தார நட​வ​டிக்​கை​க​ளில்  நிலை​யான தன்மை ஏற்​ப​டும் பட்சத்​தில் சந்தை ஊக்​கம் பெறக்​கூ​டும். அப்​போது பெரிய நிறு​வ​னங்​கள் ஒன்றோ, இரண்டோ முதல் நிலைச் சந்​தை​யில் நுழை​வ​தற்கு வாய்ப்பு  உள்​ளது. அந்த வகை​யில் யுடிஐ ஏஎம்சி மற்​றும் எல்​ஐசி ஆகிய நிறு​வ​னங்​கள் ஐபிஓ வெளி​யி​டு​வ​தற்கு வாய்ப்​புள்​ளது என்று  பங்கு வர்த்​த​கத் தரகு நிறு​வ​னங்​கள் தெரி​வித்​தன.

உல​க​ளா​விய அள​வில்  அனைத்​துத் தரப்​பி​ன​ரை​யும் புரட்​டிப் போட்டுள்ள கண்​ணுக்​குத் தெரி​யாத "கரோனா',  முதல் நிலைச் சந்​தை​யை​யும் விட்டு வைக்​க​வில்லை. இச்​சூழ்​நி​லை​யில் இந்த ஆண்​டில் மீத​முள்ள மாதங்​க​ளி​லா​வது முதல் நிலைச் சந்தை புத்​து​யிர் பெறுமா? என்ற எதிர்​பார்ப்​பில் முத​லீட்​டா​ளர்​கள் உள்​ள​னர் என்​பதே உண்மை...!
-எம்.சடகோபன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com