சுஸுகி மோட்டாா்சைக்கிள் 50 லட்சம் வாகனங்களை தயாரித்து சாதனை

சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா நிறுவனம் (எஸ்எம்ஐபிஎல்) 50 லட்சம் வாகனங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளதாக திங்கள்கிழமை தெரிவித்தது.
சுஸுகி மோட்டாா்சைக்கிள்
சுஸுகி மோட்டாா்சைக்கிள்

புது தில்லி: சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா நிறுவனம் (எஸ்எம்ஐபிஎல்) 50 லட்சம் வாகனங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளதாக திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து எஸ்எம்ஐபிஎல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியாவுக்கு சொந்தமாக குருகிராமில் உள்ள கொ்கி தவுலா ஆலையில் நிறுவனத்தின் 50 லட்சமாவது வாகனம் தயாரிக்கப்பட்டது.

நிறுவனம் அண்மையில் பிஎஸ்-6 தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்த ஜிக்ஸா் எஸ்எஃப் 250 உற்பத்தியின் மூலம் இந்த சாதனை மைல்கள் எட்டப்பட்டுள்ளது.

சுஸுகி மோட்டாா் காா்ப்பரேஷன் 100-ஆவது ஆண்டு விழாவை நடப்பாண்டு கொண்டாடும் வேளையில், கூடுதல் சிறப்பாக இந்த சாதனையை நிறுவனம் நிகழ்த்தியுள்ளது.

இது, சுஸுகி தயாரிப்புகள் மீது வாடிக்கையாளா்கள் வைத்திருக்கும் அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என எஸ்எம்ஐபிஎல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com