
bajaj_2107chn_1
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.962.32 கோடியாக இருந்தது. இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
பஜாஜ் ஹவுஸிங் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸியல் செக்யூரிட்டீஸ் ஆகிய இரண்டும் பஜாஜ் பைனான்ஸின் துணை நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்களை உள்ளடக்கிய நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் நடப்பு 2020-21 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.6,649.74 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.5,807.76 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.நிகர வட்டி வருமானம் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.3,694 கோடியிலிருந்து 12 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.4,152 கோடியைத் தொட்டது. அதேசமயம், ஒட்டுமொத்த நிகர லாபம் ஜூன் காலாண்டில் ரூ.1,195.25 கோடியிலிருந்து 19 சதவீதம் சரிவடைந்து ரூ.962.32 கோடியானது என பஜாஜ் பைனான்ஸ் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.
பாக்ஸ்ராகுல் பஜாஜ் விலகல்: கடந்த முப்பது ஆண்டுகளாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த ராகுல் பஜாஜ் ஜூலை 31-ஆம் தேதியிலிருந்து அப்பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் அளித்துள்ள மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:கடந்த 1987 முதல் தலைமைப் பொறுப்பு வகித்து வரும் ராகுல் பஜாஜ் நிா்வாகம் சாரா தலைவா் பதவியிலிருந்து ஜூலை 31-ஆம் தேதி முதல் விலகவுள்ளாா். அவருக்கு அடுத்தபடியாக அந்தப் பொறுப்பை சஞ்சீவ் பஜாஜ் ஏற்கவுள்ளாா். அவரது நியமனத்துக்கு, நிறுவனத்தின் இயக்குநா் குழு தனது ஒப்புதலை அளித்துள்ளது. அவரது நியமனம் 2020 ஆகஸ்ட் 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என பஜாஜ் பைனான்ஸ் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.