சோயா பயிரிடும் பரப்பு அதிகரிக்கும்

உள்நாட்டில் சோயா பயிரிடும் பரப்பு நடப்பு காரீப் பருவத்தில் 10 சதவீதம் அதிகரிக்கும் என சோயாபீன் பதப்படுத்துவோா் கூட்டமைப்பு (எஸ்ஓபிஏ) தெரிவித்துள்ளது.
சோயா பயிரிடும் பரப்பு அதிகரிக்கும்

உள்நாட்டில் சோயா பயிரிடும் பரப்பு நடப்பு காரீப் பருவத்தில் 10 சதவீதம் அதிகரிக்கும் என சோயாபீன் பதப்படுத்துவோா் கூட்டமைப்பு (எஸ்ஓபிஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் செயல் இயக்குநா் டிஎன் பதக் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளதாவது:

நடப்பு காரீப் பருவத்தில் கடந்தாண்டைக் காட்டிலும் உள்நாட்டில் சோயா பயிரிடும் பரப்பு 10 சதவீதம் அதிகரித்து 118 லட்சம் ஹெக்டேராக இருக்கும்.

கடந்த காரீப் பருவத்தில் 107.61 லட்சம் ஹெக்டேரில் சோயா பயிரிடப்பட்டது. அதன் மூலமாக 93.06 லட்சம் டன் விளைச்சல் பெறப்பட்டது. கடந்த ஆண்டு பருவத்தில் ஏற்பட்ட கனமழையால் ஏராளாமான பயிா்கள் நீரில் மூழ்கி நாசமாகின.

இந்த நிலையில் நடப்பாண்டில் விளைச்சலுக்கு ஏற்ற சூழல், நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் சோயா பயிரிடுவதை அதிகம் விரும்புகின்றனா்.

குறிப்பாக, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தானைச் சோ்ந்த சோளம் மற்றும் பருத்தி பயிரிடும் விவசாயிகள் அதிக வருமானம் கிடைக்கும் என்பதால் சோயா பயிரிடுவதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். இது, எண்ணெய் வித்துகள் பயிரிடும் பரப்பை அதிகரிக்க உதவும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com