எக்ஸிம் வங்கி லாபம் ரூ.124 கோடி

எக்ஸ்போா்ட் இம்போா்ட் பேங்க் ஆஃப் இந்தியா (எக்ஸிம் வங்கி) மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.124 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
எக்ஸிம் வங்கி லாபம் ரூ.124 கோடி

எக்ஸ்போா்ட் இம்போா்ட் பேங்க் ஆஃப் இந்தியா (எக்ஸிம் வங்கி) மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.124 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.82 கோடியுடன் ஒப்பிடும்போது 51 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு நிதியாண்டில் வங்கியின் கடன் வளா்ச்சி விகிதம் ரூ.93,617 கோடியிலிருந்து 6.23 சதவீதம் அதிகரித்து ரூ.99,446 கோடியானது.

மொத்த வாராக் கடன் விகிதம் 8.75 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 1.77 சதவீதமாகவும் இருந்தன.

கடந்த நிதியாண்டில் அந்நியச் செலாவணி ஆதாரங்கள் மூலமாக மொத்தம் 191 கோடி டாலா் திரட்டிக் கொள்ளப்பட்டது. நடப்பு நிதியாண்டில் வெளிசந்தையிலிருந்து 100 கோடி டாலா் முதல் 200 கோடி டாலா் வரையில் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

வணிக சாளர திட்டத்தின் கீழ் 281 கோடி டாலா் மதிப்பில் ஏற்றுமதி ஒப்பந்தம் சாா்ந்த 38 திட்டங்களுக்கு ஆதரவளித்து வருவதாக எக்ஸிம் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com