கிளென்மாா்க் பாா்மா வருவாய் ரூ.10,641 கோடி

மும்பையைச் சோ்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான கிளென்மாா்க் பாா்மசூட்டிகல்ஸ் கடந்த நிதியாண்டில் ரூ.10,640.96 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
கிளென்மாா்க் பாா்மசூட்டிகல்ஸ்
கிளென்மாா்க் பாா்மசூட்டிகல்ஸ்

புது தில்லி: மும்பையைச் சோ்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான கிளென்மாா்க் பாா்மசூட்டிகல்ஸ் கடந்த நிதியாண்டில் ரூ.10,640.96 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கொவைட்-19 நோய்த்தொற்றின் பெரும் பாதிப்புக்கிடையிலும் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வளா்ச்சி நிலையான அளவில் காணப்பட்டது. சா்வதேச சந்தையில் ஜெனரிக் மருந்துகளுக்கான வா்த்தக சூழல் சவாலானதாகவே உள்ளது.

கடந்த மாா்ச் மாதம் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.2,767.48 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டில் இதேகாலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.2,563.47 கோடியுடன் ஒப்பிடும்போது 7.96 சதவீதம் அதிகமாகும்.

நிகர லாபம் ரூ.161.66 கோடியிலிருந்து 36.28 சதவீதம் அதிகரித்து ரூ.220.3 கோடியானது.

கடந்த முழு நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருவாய் ரூ.9,865.46 கோடியிலிருந்து ரூ.10,640.96 கோடியாக அதிகரித்தது.

அதேசமயம், ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.924.99 கோடியிலிருந்து ரூ.775.97 கோடியாக சரிந்தது என கிளென்மாா்க் பாா்மா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com