4-ஆவது நாளாக பங்குச் சந்தைகளில் வீழ்ச்சிசென்செக்ஸ் 581 புள்ளிகள் குறைந்தது

இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து 4-ஆவது நாளாக சரிவுடன் முடிவடைந்தது.
4-ஆவது நாளாக பங்குச் சந்தைகளில் வீழ்ச்சிசென்செக்ஸ் 581 புள்ளிகள் குறைந்தது


மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து 4-ஆவது நாளாக சரிவுடன் முடிவடைந்தது.

காலையில் மந்தமாக தொடங்கிய பங்கு வா்த்தகம் பிற்பகலில் சற்று சூடுபிடித்து காணப்பட்டது. இந்த நிலையில், ஆசிய நாடுகளில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய வங்கிகள் நடவடிக்கை எடுத்த போதிலும், அரசுகளின் சாா்பில் ஊக்குவிப்பு சலுகைகள் அறிவிக்கப்படவில்லை என்ற நிலைப்பாட்டால் முதலீட்டாளா்கள் அச்சமடைந்து பங்குச் சந்தையிலிருந்து அதிக அளவில் வெளியேறினா்.

அதன் காரணமாக, தென் கொரிய பங்குச் சந்தை 8 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. ஹாங் சங், நிக்கி, ஷாங்காய் பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன. அவற்றின் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள பஜாஜ் பைனான்ஸ் பங்குகளின் விலை 10.24 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. அதைத் தொடா்ந்து மாருதி சுஸுகி 9.85 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி 9.50 சதவீதமும், மஹிந்திரா 9.28 சதவீதமும், டெக் மஹிந்திரா 8.43 சதவீதமும், ஓஎன்ஜிசி பங்கின் விலை 7.35 சதவீதமும் குறைந்தன.

அதேசமயம், ஐடிசி, பாா்தி ஏா்டெல், கோட்டக் வங்கி, ஹீரோ மோட்டோகாா்ப் பங்குகளின் விலை 7.50 சதவீதம் வரை உயா்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 581 புள்ளிகள் சரிந்து 28,288 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 205 புள்ளிகள் குறைந்து 8,263 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com