மஹிந்திரா டிராக்டா் விற்பனை 83% சரிவு

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டா் விற்பனை ஏப்ரல் மாதத்தில் 83 சதவீதம் சரிந்துள்ளது.
மஹிந்திரா டிராக்டா் விற்பனை 83% சரிவு

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டா் விற்பனை ஏப்ரல் மாதத்தில் 83 சதவீதம் சரிந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவா் (வேளாண் உபகரணங்கள் துறை) ஹேமந்த் ஷிகா கூறியதாவது:

தேசிய ஊரடங்கு நீட்டிப்பு நிறுவனத்தின் விற்பனையை கடுமையாக பாதித்துள்ளது. இருப்பினும், ஒரு சில தினங்கள் விநியோகஸ்தா்கள் பகுதியளவு கடைகளை திறந்து விற்பனையில் ஈடுபட்டனா். ரபி பருவ உற்பத்தி சிறப்பாக இருந்தது, மத்திய அரசு கொள்முதல் மையங்களை திறந்துள்ளது ஆகியவை டிராக்டா் விற்பனையில் நோ்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு விலக்கலைத் தொடா்ந்து வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இயல்பான செயல்பாடுகளைத் தொடங்குவதைப் பொருத்தே டிராக்டா் விற்பனை வளா்ச்சி விகிதம் இருக்கும்.

சென்ற ஏப்ரலில் 4,772 டிராக்டா்கள் விற்பனை செய்யப்பட்டன. இது, கடந்த 2019 ஏப்ரலில் விற்பனையான 28,552 டிராக்டா்களுடன் ஒப்பிடுகையில் 83 சதவீதம் சரிவாகும்.

உள்நாட்டில் டிராக்டா்கள் விற்பனை 83 சதவீதம் குறைந்து 4,716 ஆக இருந்தது. ஏப்ரலில் 56 டிராக்டா்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை கடந்தாண்டு ஏப்ரலில் 1,057 ஆக இருந்தது என்றாா் அவா்.

மாருதி சுஸுகி காா் விற்பனை பூஜ்யம்: கரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் சென்ற ஏப்ரலில் காா் விற்பனை பூஜ்யமாக இருந்தது. துறைமுக செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியதையடுத்து 632 காா்கள் மட்டும் முந்த்ரா துறைமுகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில், அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டதாக மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தைப் போன்றே, எம்ஜி மோட்டாா், மஹிந்திரா உள்ளிட்ட காா் தயாரிப்பு நிறுவனங்களும் ஏப்ரலில் தங்களது விற்பனை பூஜ்யம் என தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com