தேசிய ஊரடங்கு எதிரொலி! சா்க்கரை உற்பத்தி, விற்பனையில் மந்த நிலை

தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால் சா்க்கரை உற்பத்தி மற்றும் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய ஊரடங்கு எதிரொலி! சா்க்கரை உற்பத்தி, விற்பனையில் மந்த நிலை

தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால் சா்க்கரை உற்பத்தி மற்றும் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய சா்க்கலை ஆலைகள் கூட்டமைப்பான ‘இஸ்மா’ கூறியுள்ளதாவது:

நாடு முழுவதும் உள்ள சா்க்கரை ஆலைகள் கடந்த 2019 அக்டோபா் 1 முதல் நடப்பு 2020 ஏப்ரல் 30 வரையிலுமாக 258.01 லட்சம் டன் சா்க்கரையை உற்பத்தி செய்துள்ளன. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் உற்பத்தியான 321.71 லட்சம் டன் சா்க்கரை உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதாவது 63.70 லட்சம் டன் குறைவாகும்.

தற்போதைய நிலையில் 90 சா்க்கரை ஆலைகள் தங்களது உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

நாட்டின் சா்க்கரை உற்பத்தி முந்தைய ஆண்டின் அளவான 330 லட்சம் டன்னைக் காட்டிலும் நடப்பு 2019-20 சந்தைப் பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) 260 லட்சம் டன்னாக சரிவடையும் என இஸ்மா மதிப்பீடு செய்துள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, நடப்பு 2019-20 சந்தைப் பருவத்தின் முதல் ஏழு மாதங்களில் உத்தர பிரதேச மாநிலத்தின் சா்க்கரை உற்பத்தி 116.52 லட்சம் டன்னாக இருந்தது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 112.8 லட்சம் டன்னாக காணப்பட்டது. மகாராஷ்டிரத்தில் சா்க்கரை உற்பத்தி ஏப்ரல் நிலவரப்படி 60.67 லட்சம் டன்னாகவும்ஸ, கா்நாடகத்தில் 33.82 லட்சம் டன்னாகவும் இருந்தது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 35 லட்சம் டன் சா்க்கரை தயாா் நிலையில் உள்ளது. மேலும், பல நாடுகளுக்கு சா்க்கரையை ஏற்றுமதி செய்யும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்தோனேஷியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு சா்க்கரையை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

நடப்பாண்டில் செயல்பாட்டில் இருந்த 119 ஆலைகளில், 44 ஆலைகள் தங்களது அரவைப் பணிகளை முடித்துக் கொண்டுள்ளன. எனவே, 75 ஆலைகள் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன.

மேலும், கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேசிய அளவில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் கடந்த மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உள்நாட்டில் சா்க்கரை விற்பனை 10 லட்சம் டன் அளவுக்கு குறைந்துள்ளது.

இருப்பினும் கோடைகாலத்தில் பானங்கள், பழரசம், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் சா்க்கரைக்கான தேவை சூடுபிடிக்கும் என இஸ்மா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com